நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் 7 விஷயங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: எப்போதும் ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கையின் அறிவிப்பு பல தரப்பினருக்கு லாபகரமானதாகவும், சிலருக்கு வருத்தத்தை அளிக்ககூடதாக இருக்கும், இது இயல்பு. ஆனால் தற்போது வந்த பணவியல் கொள்கையில் வியப்புத்தகும் விஷயங்களாக எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

 

சரி இந்த ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்த பணவியல் கொள்கையில் என்ன தான் இருந்தது வாங்க பார்க்கலாம்.

இந்தியாவிற்கு பணவீக்கம் அபத்தான ஒன்று

இந்தியாவிற்கு பணவீக்கம் அபத்தான ஒன்று

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை சற்று ஜாக்கிரதையாகவே கண்காணிப்பதாகத் தெரிவித்துள்ளது."எல் நினோ எனப்படும் மாறுபாடுகளால் சராசரிக்கும் குறைந்த பருவமழை அளவு, அதன் விளைவாக விளைபயிர்களுக்கு குறைந்தபட்ச விலையை உறுதிசெய்வதில் உருவாகியுள்ள சிக்கல்கள், எரிபொருள், உரம் மற்றும் மின்சாரம் ஆகிய கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலை நிர்ணயத்தில் உள்ள சிக்கல்கள், நிதிக் கொள்கையின் தோற்றம், புவி-அரசியல் மாற்றங்கள் மற்றும் சர்வதேச நுகர்வு விலைகள் ஆகிய காரணங்களால், வரும் 2015 ஆண்டு ஜனவரி மாததிற்குள் பணவீக்கமானது 8 சதவிகிதத்தைத் தொடும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது". இது பணவீக்கம் குறித்த ஒரு எச்சரிக்கை என்பதில் ஐயமில்லை.

நுகர்வுப் பொருள் விலைக் குறியீடு

நுகர்வுப் பொருள் விலைக் குறியீடு

ரிசர்வ வங்கி, பணவீக்கத்தினைப் படிப்படியாகக் குறைக்கும் வண்ணம் நிர்ணயங்களைச் செய்துள்ளது. "ரிசர்வ் வங்கிக் கொள்கை முடிவுகள் ஜனவரி 2016 ஆண்டில் 8 சதவிகிதத்தையும் 2016ஆம் ஆண்டில் 6 சதவிகிதத்தையும் அடையவுள்ள நுகர்வுப் பணவீக்கத்தை எதிர்கொள்ளத் தேவையான வழிமுறைகளில் கவனத்தைக் கொண்டுள்ளன" என அவ்வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இது தற்போதுள்ள பணவீக்கத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறந்த அளவாகும்.

மங்கிய வளர்ச்சி
 

மங்கிய வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சி குறித்து ஆர்பிஐ சற்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. "சமீபத்திய தகவல்கள்படி சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், தொழிற்துறை செயல்பாடுகள் பொருளாதாரத்தில் ஒரு தொய்வை கண்டுள்ளன. இது ஒதுக்கப்பட்ட நுகர்வு மற்றும் முதலீடுகளின் தேவை ஆகியவற்றின் விளைவாக வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் முதலீட்டு சாதனங்கள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதைக் காட்டுகின்றது.

விவசாயம் மற்றும் ஏற்றுமதி

விவசாயம் மற்றும் ஏற்றுமதி

வரும் காலாண்டுகளில் 2013 ஆண்டின் நல்ல விவசாய உற்பத்தியின் மூலம் ஏற்பட்ட உந்துதலானது மறைந்துவிடும். மேலும் 2014 ஆண்டின் தென் மேற்குப் பருவமழை கேள்விக்குறியாக உள்ளது. தொழிற்துறை, ஏற்றுமதி மற்றும் பல சேவைத்துறைகளின் மந்த நிலை உற்பத்தி மற்றும் போட்டித்திறனை வலுவூட்ட ஒரு தேவை ஏற்பட்டிருப்பதை உணர்த்துகின்றது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

முதலீட்டு ஆதாரங்களின் நிலையற்றத் தன்மை

முதலீட்டு ஆதாரங்களின் நிலையற்றத் தன்மை

இந்தியா நல்ல முதலீட்டு ஆதாரங்களை குறிப்பாக வெளிநாட்டு அமைப்பு முதலீடுகளைப் பெற்றிருந்தாலும், இது போன்ற வளர்ந்து வரும் சந்தைகள் முதலீட்டு ஆதாரங்களில் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும். "பெரும்பாலான வளரும் பொருளாதாரங்களில், வெளிநாட்டு முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ந்த நிலையற்ற முதலீட்டு ஆதாரங்காள் ஆகியவை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளன. வரும் காலங்களில், உலகளாவிய வளர்ச்சி வருடத்தின் மீதமுள்ள காலத்தை வலுவாக்குவதோடு அபாயங்களை குறைக்கவும் செய்யும்" என ஆர்பிஐ தெரிவித்த்து.

போட்டித்திறன் மற்றும் உற்பத்தியை வலுவாக்குதல்

போட்டித்திறன் மற்றும் உற்பத்தியை வலுவாக்குதல்

கேள்விக்குறியான பருவநிலைகளின் பின்னணியில் போட்டித்திறனை மேம்படுத்தவும் மற்றும் உற்பத்தியை வலுவாக்கவும் ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்த்து.

தென் மேற்குப் பருவ மழை

தென் மேற்குப் பருவ மழை

மேலும், 2014 ஆம் ஆண்டின் தென் மேற்குப் பருவ மழையும் உறுதியற்ற நிலையிலுள்ளது. தொழிற்துறை, ஏற்றுமதி மற்றும் பல்வேறு சேவைகளின் மந்த நிலை, உற்பத்தி மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துவதன் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது என ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 quick takeaways from the RBI Monetary Policyகை – ஒரு அலசல்

The Reserve Bank of India (RBI) has an uncanny way of surprising. But, this time it did not surprise the markets and left key policy rates unchanged, as was widely expected. This was largely in keeping with the trend of falling inflation. Here are 5 quick takeaways from the RBI Monetary Policy.
Story first published: Saturday, April 5, 2014, 11:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X