இந்திய தொழிற்துறையில் மறுமலர்ச்சி!! 10.4% உயர்ந்த மின்சாரத் துறை..

டெல்லி: நாட்டின் முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் 4.5 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வளர்ச்சி 1.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

தொழில் துறை உற்பத்தியின் குறியீட்டு அட்டவணையில் 37.90 சதவீத ஒருங்கிணைந்த உற்பத்தியை கொண்டுள்ள முக்கிய எட்டு தொழிற்சாலைகளின் வளர்ச்சி பிப்ரவரி 2014ஆம் ஆண்டில் 156.7 என்ற அளவில் இருந்ததாக வணிகம் மற்றும் தொழிற்சாலை துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

6.4% வளர்ச்சி

6.4% வளர்ச்சி

ஏப்ரல் - பிப்ரவரி, 2013-14 கால கட்டத்தின் போது ஒட்டுமொத்த வளர்ச்சி 6.4 சதவீதம் ஆக இருந்தது, கடந்த ஆண்டு இதே காலத்தில் 2.6 சதவீதம் ஆக இருந்தது, என்ற தகவலையும் வணிகம் மற்றும் தொழிற்சாலை துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அமோக வளர்ச்சி

அமோக வளர்ச்சி

முக்கிய எட்டு தொழில் துறைகளான - உரங்கள், சிமெண்ட், இரும்பு, மின்சாரம், கச்சா எண்ணெய், நிலக்கரி, பெட்ரோலியம் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு - ஆகிய முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி பிப்ரவரி மாதத்தின் தொழில்துறை வளர்ச்சியின் மறுமலர்ச்சியை கோடிட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.

மின்சார துறை

மின்சார துறை

இந்த முக்கிய 8 தொழில் துறைகளில் மின்சார துறை சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் இரும்பு, சிமெண்ட், எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய துறைகளும் தங்களது மேம்பட்ட வளர்ச்சியை பிப்ரவரி மாதத்தில் பதிவு செய்துள்ளன.

4.3 சதவீத வளர்ச்சி

4.3 சதவீத வளர்ச்சி

மின்சார உற்பத்தி பிப்ரவரி 2014இல் 10.4 சதவீதமாக இருந்தது. இது 2013 பிப்ரவரியில் இருந்த வளர்ச்சியை விட அதிகம்.முந்தைய வருட இதே காலகட்டமான 2013-14 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை ஒட்டு மொத்த வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தது.

இரும்பு உற்பத்தி

இரும்பு உற்பத்தி

இரும்பு உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது. சிமெண்ட் உற்பத்தி 2.3 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டது. மறுபுறம் சுத்திகரிப்பு பொருட்கள் 3.2 சதவீதம் வளர்ச்சி கண்டது. கடந்த ஜனவரியில் இருந்த 4.5 சதவீதத்திற்கு இது எதிரானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+