அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 சாப்ட்வேர் நிறுவனங்கள்!! பண மழையில் மைக்ரோசாப்ட்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: கால் காசு என்றாலும் அரசங்க வேலையாக இருக்க வேண்டும் என்பது பழயை ஸ்டைல்.. இப்போது எல்லாம் கால் காசு என்றாலும் சாப்ட்வேர் வேலையாக இருக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர்.

 

இந்நிலையில் சில சாப்ட்வேர் நிறுவனங்கள் கடந்த 2013ஆம் நிதியாண்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவாயை குவித்துள்ளது. மேலும் சில நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளனர்.

கார்ட்னர் என்னும் ஒரு ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி கடந்த 2013ஆம் ஆண்டில் உலக சாப்ட்வேர் நிறுவனங்களின் வருவாய் 403.3 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த வருடத்தை விட 4.8 சதவீதம் அதிகமாகும். இந்த வருடமும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முதல் இடம்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

உலக சாப்ட்வேர் துறையில் மன்னனாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வருடம் 65.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது.

ஆரகிள்

ஆரகிள்

லேரி எலிசன் தலைமை வகிக்கும் ஆரகிள் நிறுவனம் கடந்த வருடம் 29.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதனால் ஆரகிள் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஐபிஎம்

ஐபிஎம்

வன்பொருள் மற்றும் மென்பொருளை சிறப்பான முறையில் தயாரிக்கும் ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் 29.1 பில்லயன் டாலர். அரகிள் நிறுவனத்தை தொடர்ந்து ஐபிஎம் முன்றாம் இடத்தில் உள்ளது.

எஸ்ஏபி (SAP)
 

எஸ்ஏபி (SAP)

எஸ்ஏபி நிறுவனம் கடந்த வருடம் 18.5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது இந்நிறுவனம் அடைந்த உயரிய வருவாய் என்பது குறிப்பிடதக்கது

சிமென்டெக்

சிமென்டெக்

கடந்த வருடத்தில் சிமென்டெக் நிறுவனத்தின் வருவாய் 6.4 பில்லயன் டாலர் ஆகும்.

ஈஎம்சி2

ஈஎம்சி2

ஈஎம்சி2 நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டு வருவாய் 5.6 பில்லியன் டாலர்.

ஹெச்பி

ஹெச்பி

ஹெச்பி நிறுவனமும் ஐபிஎம் நிறுவனத்தை போலவே வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஒர் நிறுவனம். இந்நிறுவனத்தின் வருவாய் 4.9பில்லியன் டாலர்.

விஎம்வேர்

விஎம்வேர்

2013ஆம் ஆண்டின் விஎம்வேர் நிறுவனத்தின் வருவாய் 4.8 பில்லியன் டாலர்.

சிஎ டெக்னாலஜிஸ்

சிஎ டெக்னாலஜிஸ்

நியூயார்க்கை தலைமை இடமாக கொண்டு செயல் படும் சிஎ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 4.2 பில்லியன் டாலர்.

சேல்ஸ்போர்ஸ்

சேல்ஸ்போர்ஸ்

2013ஆம் ஆண்டின் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் வருவாய் 3.8 பில்லியன் டாலர்.

சாப்ட்வேர் துறையின் மீது ஏன் இந்த ஆர்வம்??

சாப்ட்வேர் துறையின் மீது ஏன் இந்த ஆர்வம்??

சாப்ட்வேர் துறையில் ஆயிரம் கஷ்டம், மனஉளைச்சல் இருந்தாலும் சாப்ட்வேர் துறையே தேடி சென்று விழுகிறது இன்றைய தலைமுறை. இதற்கு என்ன காரணம் என்று இளைஞர்கள் சிலர் கூறுகையில், ஹெய் டெக் வாழ்க்கை முறை, அதிகப்படியான சம்பளம் இதைவிட வேற என்ன வேணும் பிரோ என்று கூல்லாக சொல்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The 10 Most Profitable Software Companies in the World

Although software companies are working hard to keep up with competition, and adjust to newer technologies, the market is still experiencing growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X