யாரை நம்பி இந்திய பொருளாதாரம் உள்ளது?? சத்தியமா அமெரிக்கா இல்ல...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2014ஆம் நிதியாண்டு இந்திய நாட்டிற்கு மிகவும் சவாலான ஆண்டு என்றே சொல்லாம். கடுமையான நிதி நெருக்கடி, பணவீக்கம், உணவு பற்றாக்குறை, விலை உயர்வு, வர்த்தக பற்றாக்குறை என பல பிரச்சனைகளில் இந்தியா திளைத்து நின்றது.

 

அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி சில கடுமையான செயல் திட்டத்திற்கு பிறகு இந்திய பொருளாதார நிலை சற்று நிலையான தன்மைக்கு வந்துள்ளது. மேலும் இந்திய பொருளாதாரத்தில் வர்த்தக பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் பெரும் அளவில் குறைந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம், வேல்டு எக்கனாமிக் அவுட்லுக் பத்திரிக்கையில் இந்தியா பொருளாதாரம் எந்த நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு அமையும் என விமர்சித்துள்ளது.

கணிப்புகள்

கணிப்புகள்

சரி நாம் அனைவரின் கணிப்பின் படி இந்திய பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை பொருத்து அமைவதில்லை. இது நாம் அனைவரும் கண்முடித்தனமாக நம்பப்படும் ஒர் தவறான கருத்து.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

நாம் இந்திய பொருளாதாரம் சீன பொருளாதாரத்தை பொருத்து அமைகிறது என்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உற்பத்தி சீனாவின் மொத்த உற்பத்தியுடன் 0.66 சதவீதம் ஒத்துப்போகிறது. இதனால் சீனாவின் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்திற்கு அதிகளவு ஒத்துமை உள்ளதாக சர்வதேச நாணய நிதியம், வேல்டு எக்கனாமிக் அவுட்லுக் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள்

சீனாவை தவிர்த்து அர்ஜென்டீனா 0.56 சதவீதமும், கொலம்பியா 0.53 சதவீதமும், பிரேசில் 0.51 சதவீதமும் மட்டுமே ஒத்துபோகிறது. மேலும் இந்தோனேஷியா பொருளாதாரத்துடன் இந்திய பொருளாதாரம் 0.27 சதவீதம் மட்டுமே ஒத்துபோகிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பியா
 

அமெரிக்க மற்றும் ஐரோப்பியா

இதுவரை நாம் சீனாவுடன் ஒப்பிட்டு பார்த்தோம், உலகில் வலிமையான பொருளாதாரம் என போற்றப்படும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாமா?? இந்திய பொருளாதாரம் அமெரிக்காவுடன் 0.27 சதவிதமும், ஐரோப்பிய நாட்டு பொருளாதாரத்துடன் 0.42 சதவீதம் மட்டுமே ஒத்துபோகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

which country India is dependent for growth?

Guess which country India is dependent on for growth? No, it is not US. It is China. According to the data in the IMF’s World Economic Outlook, India’s real GDP has the most correlation with the China's at 0.66. And no other country has this level of correlation with China.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X