டெல்லி: கடன் பிரச்சனையால் தனது விமான நிறுவனத்தை பறிக்கொடுத்த விஜய் மல்லையாவின் தற்போது என்ன தெரியுமா?? அளவிற்கு மீறி கடன் பெற கூடாது என்பதற்கான சிரியான உதாரணம் விஜய் மல்லையா தான். யூனைட்டெட் நிறுவனத்தின் தலைவரான இவர் 2002 முதல் 2005 ஆண்டுகளில் பல வகையான வியாபாரத்தில் இறங்கினார். அதில் இந்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனமும் ஒன்று துவக்கம் முதலே இந்நிறுவனத்தை கடன் என்னும் கடலில் தான் துவங்கினார்.
இந்நிறுவனம் தொடங்கி சில வருடங்கள் சிறப்பாகவும், செழிப்பாகவும் செயல்பட்ட இந்நிறுவனம் அதன் பின் தொடர்ந்து சிக்கல்களை சந்திக்க துவங்கியது. இந்த பிரச்சனைகளை சமாலிக்க மீண்டும் மிகப்பெரிய அளவில் கடன் பெற்றார் மல்லையா. இங்குதான் நிறுவனத்தின் பேஸ்மட்டம் வீக் ஆக துவங்கியது.
விமான சேவை முடக்கம்
தொடர் கடன் தொல்லையால் இந்நிறுவனம் கடந்த அக்டோபர் 2012ஆம் ஆண்டு தனது முழு செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. இதனையடுத்து நிறுவனத்தின் சொத்துக்கள் ஒவ்வொன்றும் கடன் கொடுத்த நிறுவனங்கள் ஏலத்திற்கு விட துவங்கின.
எஸ்பிஐ கேப்பிடல்
இந்நிறுவனத்திற்கு மிக பெரிய அளவில் கடன் கொடுத்த நிறுவனங்களில் எஸ்பிஐ கேப்பிடல் நிறுவனமும் ஒன்று. எஸ்பிஐ கேப்பிடல் நிறுவன தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் பிரண்டுகளை விற்க துவங்கியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பும் மண்னோடு மண்னாக போனது.
கைகொடுக்க யாரும் இல்லை
கிங்பிஷர் நிறுவனத்தின் கடன் தொகை மட்டும் சுமார் 8000 கோடியாகும். இதுவரை இந்தியாவில் யாரும் இத்தகைய பெரு தொகையை கடனாகப் பெற்று நிறுவனத்தை முடும் நிலைக்கு கொண்டு வந்ததில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்நிறுவனத்தை வாங்க எந்த ஒரு தனியார் நிறுவனமோ அல்லது அரசு நிறுவனமோ வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
ரூ.7000 கோடி கடன் நிலுவையில்
நிறுவனத்தின் சொத்துக்களை விற்றதன் மூலம் வெறும் 1000 கோடி ரூபாய் மட்டும் திறட்ட முடிந்ததாக எஸ்பிஐ கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கிங்பிஷர் நிறுவனத்தின் முத்திரைகளை விற்க கடன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
விற்பனை
இதில் கிங்பிஷர் நிறுவனத்தின் ஃபிளை கிங்பிஷர் (லேபிள்), ஃபிளை கிங்பிஷர் , பிளையிங் மாடல்ஸ், பிளை தி குட் டைம்ஸ், பன்லைனர், கிங்பிஷர் மற்றும் பிளையிங் பர்டு டிவைஸ் போன்ற முத்திரைகளை விற்க எஸ்பிஐ கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரண்டு மதிப்பு
ஐந்து வருடங்களுக்கு முன்பு கிங்பிஷர் பிராண்டின் மதிப்பு 3000 கோடி ரூபாய்க்கு மதிப்புடையதாக இருந்தது. ஆனால் தற்போது இதன் நிலை என்ன என்பதை நீங்களே கணித்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications