4 வருடத்தில் 50 கிளைகளை திறக்கும் வால்மார்ட்!!
டெல்லி: இந்தியாவில் சில்லரை வர்த்தகத்திற்கு எதிராக பல குழப்பங்களும் பிரச்சனைகளும் கிளம்பியுள்ள நிலையில் டாடா நிறுவனத்துடன் இணைந்து டெஸ்கோ நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை துவங்கியது. மேலும் உலகின் மற்றொரு சில்லரை வர்த்தக ஜம்பவானான வால்மார்ட் நிறுவனம் அடுத்த 4 முதல் 5 வருடங்களில் இந்தியாவில் சுமார் 50 விற்பனை கிளைகளை திறக்கும் பணியில் இறங்கியுள்ளது.

வால்மாட்டின் அடுத்த 50 கிளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் வேகமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அந்தொனி ராஸ் தெரிவித்தார்.
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் எற்கனவே இந்தியா முழுவதும் 20 கடைகள் திறந்துள்ளன. மேலும் இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications