டெல்லி: திங்கட் கிழமை கிகிங்பிஷர் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு சமரிப்பித்த அறிக்கையில் ஒரு திடுக்கிடும் செய்தியுடன் சமர்ப்பித்தது. கிங்பிஷர் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் மொத்தம் நான்கு பேர் அதில் விஜய் மல்லையாவை தவிர்த்து அனைவரும் நிர்வாக பொறுப்பில் இருந்து வெளியேறினர். இதனால் 5% சதவீதம் செயல்பட்ட கிங்பிஷர் நிறுவனம் தற்போது முழுமையாக செயல் இழந்துவிட்ட நிலைக்கு தள்ளப்பட்டது.
யூபி குழுமத்தின் முன்று முக்கிய அதிகாரிகள் தான் கிங்பிஷர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். இந்த முவர், ரவி நேடுன்கடி, எஸ்ஆர் குப்தே மற்றும் எம்எஸ் கபூர் ஆகியோர் ஆவர். இப்போது கிங்பிஷர் நிர்வாக குழுவில் விஜய் மல்லையா தனிமரமாக உள்ளர்.
மேலும் நேற்று கடன் கொடுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கிங்பிஷர் நிறுவனத்தின் பிராண்டுகளை ஏலத்திற்கு கொண்டு வந்தது. இந்த ஏலத்தின் போது கிங்பிஷர் நிறுவனம் கடன் விபரங்களை வெளியிட்டனர். இந்தியாவில் செயல்படும் முக்கிய வங்கிகள் அனைத்திலும் இந்நிறுவனம் கடன் பெற்றுள்ளது. அப்படி எந்தெந்த வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தை நம்பி கடன் கொடுத்துள்ளது என்பதை பார்போம்.
இந்த கடன் பட்டியலில் (சாரி ஏமாந்தோர் பட்டியல்) சுமார் 17 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளன.
எஸ்பிஐ கேப்பிடல்
இந்த பட்டியலில் முதல் இடம் பிடிப்பது எஸ்பிஐ கேப்பிடல் தான். இந்த நிறுவனம் சுமார் 1600கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது.
பிஎன்பி
இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது பஞ்சாப் நேஷ்னல் வங்கி. இந்த கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிங்பிஷர் நிறுவனத்திற்கு 800 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஐடிபிஐ வங்கியும் 800 கோடி ரூபாய் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
பாங்க் ஆஃப் இந்தியா
இந்திய பொது துறை வங்கியான பாங்கு ஆஃப் இந்தியா 650 கோடி கொடுத்துள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா
இந்த வங்கி 550 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இவ்வங்கியின் தலைவர் எஸ்எஸ் முத்ரா ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மற்ற வங்கிகள்
யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா (430 கோடி ரூபாய்), சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா (410 கோடி ரூபாய்), யூசிஒ வங்கி (320 கோடி ரூபாய்), கார்ப்ரேஷன் வங்கி (310 கோடி ரூபாய்), ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் (150 கோடி ரூபாய்), இந்தியன் ஒவர்சிஸ் வங்கி(140 கோடி ரூபாய்), பெடரல் வங்கி (90 கோடி ரூபாய்), பஞ்சாம் மற்றும் சிந்து வங்கி (60 கோடி ரூபாய்), ஆக்சிஸ் வங்கி (50 கோடி ரூபாய்), ஜம்மு & காஷ்மீர் வங்கி (80 கோடி ரூபாய்) மற்றும் ஒரியென்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (50 கோடி ரூபாய்).
நிதி நிறுவனங்கள்
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் கிங்பிஷர் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளது. அவை எஸ்ஆர்இஐ உள்கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் (430 கோடி ரூபாய்).


Click it and Unblock the Notifications