மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் பதவியில் மற்றொரு இந்தியன்!!

பெங்களுரூ: இந்தியர்களின் முழுமையாக உணர்ந்த உலகில் மென்பொருள் ஜம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் உயர்பதவிகளில் பல இந்தியர்களை பணி நியமனம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் இந்திய நிறுவனத்தின் தலைவர் முக்குந் மோகன் தற்போது மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளையின் தலைவர் பதவிக்கு பணிமாற்றம் அடைந்துள்ளது.

மேலும் இவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகமான ரெட்மோட் அலுவலகத்தில் இருந்து மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க, சீனா, மற்றும் இந்திய செயல்பாடுகளை கவணிக்க உள்ளர் என்பது குறிப்பிடதக்கது.

மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ்

மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ்

இந்நிறுவனம் உலக நாடுகளில் உள்ள சிறு மற்றும் துவக்க நிறுவனங்களை கண்காணித்து இந்த நிறுவனங்களின் வலத்தை பெருக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

முக்குந் மோகன்

முக்குந் மோகன்

இந்த பணிமாற்றத்தை குறித்து அவர் கூறுகையில், இந்த வேலை உலகின் பல நாடுகளின் நிறுவனங்களை கண்காணிக்கப்படுவது. இதை நான் இந்தியாவில் இருந்து செய்ய முடியாது. அதனால் நிறுவனத்தின் தலைமை இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

கல்வி

கல்வி

முக்குந் மோகன் 1993ஆம் ஆண்டு மைசூர் கல்லுரியில் கம்பியூட்டர் சயின்ஸ் இளநிலை பட்டம் பெற்றார், பின்பு 1994ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலேன்டு பால்டிமோர் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு இவர் சிஸ்கோ மற்றும் ஹெச்பி நிறுவனத்தில் பணியாற்றினார்.

 

சத்ய நாதெல்லா

சத்ய நாதெல்லா

2014ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஈஓ-வாக சத்ய நாடெல்லா பதவி உயர்வு பெற்றர். இவர் ஒரு இந்தியர். ஒரு இந்தியர் அமெரிக்காவின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சீஈஓ-வான செய்தி உலகம் முழுவவது ஒரு காட்டு தீ போல பரவியது.

நிறுவன முதலீடு

நிறுவன முதலீடு

முக்குந் மோகன் தலைமையில் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவில் இதுவரை 60 நிறுவனங்களில் முதலீடு செய்யதுள்ளது. மேலும் ஐந்தாம் கட்ட நடவடிக்கையில் இன்னும் 16 இந்திய நிறுவனங்களில் இந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடதக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+