டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் வேலை வாய்ப்பு சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பு சுமார் 30 சதவிதத்திலிருந்து 40 சதவிதம் வரை உயரும் என ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 2 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டுவர மனிதவள மேம்பாட்டு வல்லுனர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக மனிதவள மேம்பாட்டு வல்லுனர்கள் தெரிவித்தனர்.
2014ஆம் ஆண்டு வியாபர தேவைகளுக்காக இந்தியா உள்பட பல நாடுகளில் 12 இலட்சத்திலிருந்து 14 இலட்சம் வரை புதிய வேலை வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும் என்று மனித உரிமை கழகத்தை சார்ந்த பல்வேறு வல்லுனர்களின் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேர்தல்
எப்படி இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவை பொருத்தே எந்த முடிவும் எடுக்கப்படும். அதுவும் நிலையான ஒரு அரசால் மட்டுமே வேலைவாய்ப்பின் சதவிகித்ததை உயர்த்த முடியும் என்று நிபுனர்கள் கூறுகின்றனர். 2014ஆம் வருடத்தில் 20 இலட்சத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்பை கொண்டு வர வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பொருளாதாரா மந்தநிலை
கடந்து வருடக் கணக்கின்படி இந்தியாவில் மட்டும் 10 லட்சத்துக்கு மேல் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அதிகபடியான வேலைவாய்ப்பு திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியவில்லை.
வேலைவாய்ப்பு சந்தை
தற்போது தேர்தல் தொடங்கி இருப்பதால் வேலை வாய்ப்பு சந்தை சூடுபிடிக்க துவங்குகிறது. முக்கியமாக தகவல் தொடர்பு, பிஆர், வர்த்தக ஆய்வு போன்ற இடங்களில் அரசியல் கட்சிகளின் பிரச்சார தேவையை கருதி பல வேலை வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நிலையான அரசு தேவை
எப்படி இருந்தாலும் பிரச்சார தேவைக்காக வேலை வாய்ப்பு அதிகளவில் இருப்பது தற்காலிகமானது தான். அதை நிரந்தரமாக்க வேண்டுமென்றால் இந்த தேர்தல் முடிவில் ஒரு நிலையான அரசை அமைக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி.. அனைவருக்கு வேலைவாய்ப்பு..
நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரே வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை கூற இயலும். அப்படி அமையும் பட்சத்தில் நல்லதொரு நாட்டை அமைக்க முடியும். அனைவருக்கும் கல்வி என்பதை போன்று அனைவருக்கு வேலை வாய்ப்பு என்ற நிலை வரும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications