தென் ஆப்பிரிக்கவை விழ்த்தியது நைஜீரிய!! பொருளாதாரத்தில் முதல் இடம்...

நைஜீரிய: நைஜீரிய அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) கணக்கிடுவதற்கான அதன் வழிமுறைகளை மாற்றியமைத்ததற்குப் பின் ஆப்பிரிக்காவின் மிகபெரும் பொருளாதாரத்துக்கான பந்தயத்தில் நைஜீரியா தென்னாப்பிரிக்காவை முந்தியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த மாற்றங்களினால் நைஜீரியாவின் ஜிடிபி ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளதனால், தற்போது உலகளவில் 26ஆவது பெரிய பொருளாதார நாடாக தாம் விளங்குவதாக பெருமையடித்துக் கொள்கிறது நைஜீரியா. (நல்ல விஷயம் தானே..)

90% சதவீதம் உயர்ந்த ஜிடிபி

90% சதவீதம் உயர்ந்த ஜிடிபி

புதிய புள்ளிவிவரங்களின் படி, 2013 ஆம் ஆண்டின் போது நைஜீரியாவின் ஜிடிபி சுமார் 509.9 பில்லியன் டாலராக (307.6 பில்லியன் பவுண்ட், 371.4 பில்லியன் யூரோ) இருந்துள்ளது. இது இதற்கு முந்தைய வருடங்களில் இருந்த அதன் ஜிடிபி எண்ணிக்கைகளைக் காட்டிலும் சுமார் 90% அதிகமானதாகவும், 2013 ஆம் ஆண்டின் போது தென்னாப்பிரிக்காவின் ஜிடிபியாக கூறப்பட்ட 370.3 பில்லியன் டாலரைக் காட்டிலும் அதிகமானதாகவும் காணப்படுகிறது.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

தேசிய ஜிடிபியின் அடித்தளம் மாற்றியமைக்கப்பட்டு, தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளான டெலிகாம்ஸ், தகவல் தொழில்நுட்பம், ஏர்லைன்ஸ், சினிமா தயாரிப்பு மற்றும் ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது.

மக்கள்தொகை

மக்கள்தொகை

இவ்வாறான மாற்றத்திற்கு பின்னும் கூட, நைஜீரியாவினால் அதன் மண்டல எதிரி நாடுகளை அனைத்து துறைகளிலும் புறந்தள்ள இயலவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகை அளவை கணக்கில் கொண்டால், தலைக்கு இவ்வளவு என்ற ஜிடிபி எண்ணிக்கைகள் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாகவே காணப்படுகின்றன.

நைஜீரியவின் பாதகமான நிலை

நைஜீரியவின் பாதகமான நிலை

சுமார் 170 மில்லியன் மக்கள் தொகையுடன், தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நைஜீரியாவின் ஜிடிபி, தென்னாப்பிரிக்காவின் ஜிடிபியைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவானதாகக் காணப்படுகிறது. இது நைஜீரிய பொருளாதாரம் அவ்வளவு நன்றாக செயல்படாததையே காட்டுகிறது.

20 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

பெரும்பாலான நாடுகள் சில வருடங்களுக்கு ஒரு முறை தங்களின் ஜிடிபியை மாற்றியமைக்கின்றன. ஆனால், நைஜீரியாவோ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.

தொழிற்துறை வளர்ச்சி

தொழிற்துறை வளர்ச்சி

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், ஏராளமான புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, நன்றாக கொழித்துக் கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டு மடங்காக பெருகியுள்ள நைஜீரிய ஜிடிபிக்குக் காரணம் இதுவே ஆகும்.

இலக்கை நோக்கி செல்லும் நைஜீரியா

இலக்கை நோக்கி செல்லும் நைஜீரியா

இந்த மாற்றங்கள் அனைத்தும் உலகின் 20 பெரிய பொருளாதாரங்களுள் ஒன்றாக இடம்பிடிக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட நைஜீரியாவுக்கு பெருமளவு உதவியுள்ளன. மேலும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இவை உதவி செய்யக்கூடும்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

ஆப்பிரிக்காவின் முன்னணி எண்ணை உற்பத்தியாளராக விளங்கும் இந்நாட்டில் ஏற்கெனவே ஏராளமான அந்நிய நிறுவனங்கள் காலூன்றியிருந்தாலும், இந்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய பணவரவை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எண்ணெய் மற்றும் எரிவாயு

எண்ணெய் மற்றும் எரிவாயு

பொதுவாக, பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் பங்களிப்பாகவே இருக்கும். ஆனால், தற்போது சுமார் 15% பங்களிப்பு மட்டுமே இவற்றிலிருந்து அளிக்கப்பட்டுள்ளதாக இப்புதிய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சினிமாத்துறை

சினிமாத்துறை

நோலிவுட் என்றழைக்கப்படும் இந்நாட்டின் சினிமாத்துறை முதன் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் ஜிடிபியில் சுமார் 1.4% அளவுக்கு பங்களிப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

மேலும், இந்த மறுமதிப்பீடு நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதித்து, வளர்ச்சி விகிதத்தையும் மட்டுப்படுத்தக்கூடியதாகும். கடந்த மூன்று மாதங்களில், இந்த புதிய புள்ளிவிவரங்களை, இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட், உலக வங்கி மற்றும் ஆப்பிரிக்கா வளர்ச்சி வங்கி ஆகியவை வழிமொழிந்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+