சென்னை: மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகளவில் வெற்றிநடைபோட்ட பின்லாந்து நாட்டு நோக்கிய நிறுவனத்தின் தற்போதைய நிலை நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிறுவனத்தின் தனது தமிழ்நாட்டு தொழிற்சாலைக்கு வரி செலுத்த தவறியது, இந்த வரி நிலுவை தற்போது தொழிற்சாலையை முடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனம் தொழிற்சாலை பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் இந்நிறுவனத்தின் சிறிய வகை போன்களை தயாரிக்கவும், மொபைல்களை ஒருங்கிணைக்கவும் செய்கிறது. கடந்த வருடம் வரி நிலுவை பிரச்சனைகளால் இந்த தொழிற்சாலை முற்றிலும் முடங்கியது.
மைக்ரோசாப்ட்
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிய நோக்கிய நிறுவனத்தின் சில பிரிவுகளை மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பற்றியது.
விருப்ப ஓய்வு உறுதி
இதுகுறித்து நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது "முக்கிய பணியாளர்களை தவிற மற்ற பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வை அளிக்க நிறுவனம் முடிவு செய்திருப்பது உண்மை தான். இதனால் பணியாளர்கள் பிற நிறுவனங்களில் பணி தேட உதவியாக இருக்கும்" என நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
நிதியியல் கொள்கை
மேலும் அவர் கூறுகையில், "நிறுவனத்தின் முடிவுகள் படி விருப்ப ஓய்வை பெறும் பணியாளர்களுக்கு சாதகமான நிதியியல் கொள்கையை வகுத்துள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
உண்ணாவிரத போராட்டம்
மேலும் இந்நிறுவனம் எத்தனை பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வை அளிக்க போகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை எனவும் தெரிவித்தது. இந்ந தொழிற்சாலையில் 2000 பேர் பணியில் உள்ளனர். வேலை பாதுகாத்துக் கொள்ள இந்நிறுவனத்தின் பணியாளர்கள் இரண்டு வாரங்கள் முன்பு உண்ணாவிரத போராட்டம் இருந்தார்கள்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications