இங்கிலாந்து: முறைகேடுகள், அபராதங்கள் மற்றும் வருமான வரி சிக்கல்களால் சிக்கித் தவித்தாலும் லாயிட்ஸ் வங்கி தன் 400 மூத்த வங்கியாளர்களின் சம்பளங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது.
ஸ்கை நியுஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, பொதுத்துறையால் நடத்தப்படும் இந்த வங்கி, தன் பங்குதாரர்களிடம் தன் பணியாளர்களுக்கு சம்பளத்தின் 200 சதவிகிதத்தை போனஸாக வழங்க அனுமதி கோரியுள்ளது.
யுகேஎஃப்ஐ (யூகே பைனான்ஸியல் இன்வெஸ்ட்மென்ட்) குழுமம் இவ்வங்கியில் பெரும் பங்கை வைத்துள்ளது. 25 சதவிகிதம் மட்டுமே அரசின் வசம் உள்ளது. தன் பங்குதாரர்களுக்கு பங்காதாயம் வழங்கவும் சம்பளங்களை மாற்றி அமைக்கவும் அரசிடம் அவ்வங்கி ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளது. கடைசியாக அவ்வங்கி 2008ஆம் ஆண்டு பங்காதாயங்களை செலுத்தியது. எனினும், அந்த நிறுவனம் தன்னுடைய நிதி ஆதாரங்கள் இரட்டிப்பானதால் அடிப்படை லாபமும் 6.2 பில்லியன் பவுண்டுகளாக மாறியதையடுத்து தன்னுடைய வங்கிப் பணியாளர்களின் போனஸை வருடத்திற்கு 10 சதவிகிதம் வரை உயர்த்தி 398 மில்லியன் பவுண்டுகளாக (478 மில்லியன் யூரோக்கள் அல்லது 655 மில்லியன் டாலர்கள்) உயர்த்தியது. அந்த வங்கியின் முழு ஆண்டு நிதி நிலை அறிக்கைகளின்படி, அதன் தலைமை செயல் அதிகாரி ஆண்டனியோ ஹொர்டா ஒசரியோ சுமார் 1.7மில்லியன் பவுண்டுகளை போனஸாக ஐந்தாண்டுகளுக்கு தவணையாக பங்குகள் வடிவில் சில நிபந்தனைகளுக்குட்பட்டுப் பெறுவார். அவருடைய ஒப்பத்தத்தின் படி, அதிகபட்சமாக தன்னுடைய அடிப்படை சம்பளமான 1.061 மில்லியன் பவுண்டுகளின் மீது 225 சதவிகிதம் வரை பெறத் தகுதியானவராவார்.
லாயிட்ஸ் வங்கி
10% ஊதிய உயர்வு
1.7மில்லியன் பவுண்ட்
225 சதவிகிதம் உயர்வு


Click it and Unblock the Notifications