டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது இண்டர்நெட் மற்றும் தொலைபேசி கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு வந்தவுடன் மற்ற நிறுவனங்களும் தங்களின் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும் அறிவித்தது. இதனால் இந்தியாவின் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் தனது சேவைக் கட்டணத்தை உயர்த்துவதாக தெரிகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது விலைமாற்றத்தை ஏப்ரல் 3 முதல் துவங்கியது. இதன் முதல் கட்டமாக ஏர்டெல்லின் 125 ரூபாய் மொபைல் இண்டர்நெட் சேவைக்கான கால நாட்களை, 28 நாட்களில் இருந்து 21 நாட்களாக குறைத்தது குறிப்பிடதக்கது.
டிராய்
தொலைதொடர்பு கண்காணிப்பு அமைப்பான டிராய், தொலைதொடர்பு சேவைக்கான கட்டண உயர்வை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் கட்டண உயர்வுக்குகான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த கட்டண மாற்றம் வெளிவரும்.
லாபம் குறைந்தது
மேலும் ஏர்டெல்லின் கூப்பன் ரீசார்ஜில் லாபம் குறைந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதனால் விற்பனையாளர்கள் அதிக லாபம் தரும் டாடா டோக்கோமோ நிறுவன சேவைகளை அதிகளவில் விற்பனை செய்கின்றனர்.
லேண்டுலைன் சேவை
மேலும் ஏர்டெல் நிறுவனம் மொபைல் சேவை கட்டண மாற்றத்தை உறுதி செய்ததுடன் லேண்டுலைன் சேவைக்கான கட்டணத்தில் எந்த விதமான மாற்றம் இல்லை என தெரிவித்தது. சேவைக்கான விலை உயர்த்துவது, சலுகைகளை வழங்குவது இந்த போட்டி நிறைந்த உலகில் மிகவும் சாதாரணம் எனவும் இந்நிறுவனம் தெரிவித்து.
வோடாபோன்
தற்போது கட்டணத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை, சில மாதங்களுக்கு பின்பு வர்த்தக செயல்பாட்டை உணர்ந்து விலை மாற்றம் செய்ப்படலாம் என வோடாபோன் நிறுவனம் தெரிவித்தது.
ஐடியா செல்லுலார்
மேலும் ஐடியா செல்லுலார் நிறுவனம் மாநிலங்கள் தகுந்தார் போல் சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனமும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை கட்டண மாற்றத்தை எதிரொலியை ஆராய்ந்து முடிவு செய்யப்போவதாக அறிவித்தது.
ஏர்டெல்லின் ஆதிக்கம்
இந்திய மொபைல் போன் வாடிக்கையாளர்களின் 22 சதவீத்தை ஏர்டெல் நிறுவனம் கொண்டுள்ளது. அதாவது சுமார் 20 கோடி வாடிக்கையாளகர்களை தன்னகத்திலே கொண்டுள்ளது.
விலை மாற்ற போட்டி
கடந்த 2 வருடங்களாக ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களில் எதேனும் ஒரு நிறுவனம் தனது சேவை கட்டணத்தை உயர்த்தினால் இதர இரு நிறுவனங்களும் விலையை மாற்றியமைக்கிறது. (இவனுங்களுக்கு இதே வேலையா போச்சுபா..)
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications