டெல்லி: இந்தியாவின் முதன்மை கார் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்ச் மாத விற்பனை சுமார் 17.89 சதவீதம் குறைந்துள்ளதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாக்குவார் லேண்டுரோவர் நிறுவனத்தின் கார்களையும் சேர்த்து கடந்த மாதம் 95,668 கார்களை மட்டுமே விற்றது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 1,16,521 கார்களை விற்றது குறிப்பிடதக்கது.
பயணிகள் வாகனம்
பயணிகள் வாகன வற்பனையில் கடந்த வருட மார்ச் மாதம் 55,722 கார்களை விற்றது, ஆனால் வருடம் இந்த வகை வாகன விற்பனையில் 1.25 சதவீதம் உயர்ந்து 56,420 கார்களை விற்பனையானது.
ஜாக்குவார்
மேலும் உயர்தர கார் வகைகளான ஜாக்குவார் மற்றும் லேண்டுரோவர் கார் விற்பனையில் 1.47 சதவீதம் உயர்ந்து 43,311 கார்களை விற்றது, கடந்த வருடம் 42,682 கார்கள் மட்டும் வற்பனையானது.
வணிக வாகனங்கள்
இந்நிறுவனத்தின் வணிக வாகனங்கள் பிரிவில் தான் விற்பனை அதிகளவில் சரிந்துள்ளது. கடந்த வருடம் இப்பிரிவில் 60,799 வாகனங்களை விற்ற இந்நிறுவனம் தற்போது 35.44 சதவீதம் சரிந்து வெறும் 39,248 வாகனங்களை விற்றுள்ளது.
டெல்லி மெட்ரோ
டெல்லி மெட்ரோவிற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது 400 சொகுசு போருந்துகளை விநியோகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications