25% வளர்ச்சியுடன் சிறப்பாக செயல்படும் இன்போசிஸ்!!

பெங்களுரூ: இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் இன்று காலை 2013ஆம் நிதியாண்டின் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதில் இந்நிறுவனம் சுமார் 25 சதவீதம் வளர்ந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது. இந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் சுவிடன் நாட்டு கார் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனமான வால்வோ நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய ஒரு ஒப்பந்தத்தை செய்தது குறிப்பிடதக்கது.

மேலும் நான்காம் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் சுமார் 2,992 கோடியை எட்டியது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 2,392 லாபம் அடைந்தது.

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 7 முதல் 9 சதவீதம் வரை டாலர் வருவாய் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ரூபாய் வருவாயில் தற்போதுள்ள 5.9 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதம் வரை அதிகரிக்க முழு வேகத்துடன் செயல்பட இந்நிறுவனம் துவங்கியுள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள்

புதிய வாடிக்கையாளர்கள்

நான்காம் காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் 50 வாடிக்கையாளர்களை அடைந்தது. 2014ஆம் நிதியாண்டில் சுமார் 238 வாடிக்கையாளர்களை பெற்றது என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்தது.

வருவாய்

வருவாய்

நான்காம் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 1 சதவீதம் குறைந்து 12,875 கோடியை அடைந்தது. மேலும் சந்தை வல்லுனர்களின் எதிரிப்பார்பை விட மிகவும் குறைந்தது.

பங்கு லாபம்

பங்கு லாபம்

2014ஆம் நிதியாண்டில் மார்ச் 31 முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு லாபம் 13 சதவீதம் உயர்ந்து 186.35 ரூபாயை அடைந்தது.

உலக வர்த்தகம்

உலக வர்த்தகம்

இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் செயல்படுகிறது என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே மேற்கு அமெரிக்காவில் நிறுவன செயல்பாடுகளில் 0.8 குறைந்தது, ஐரோப்பிய நாடுகளில் 1 சதவீதம் உயர்ந்தது, மேலும் இந்தியாவில் 0.1 மட்டுமே உயர்ந்தது. மற்ற இடங்களில் அனைத்திலும் சேர்த்து 1.5 சதவீதம் குறைந்ததுள்ளது.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

இந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக சம்பள உயர்வும் மிகவும் குறைவாகவே அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் பணிபுரியும் பணியாட்களுக்கு 1.2 சதவீத உதிய உயர்வும், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு 6 - 7 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வினால் நிறுவன பங்குகள் 300 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+