பின்லாந்து: விற்பனையிலும், தயாரிப்பிலும் நலிவடைந்த நோக்கிய நிறுவனத்தின் சிஇஓ பதிவி தற்போது காலியாக உள்ளது. இந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஸ்டீபன் எலோப் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் சில முக்கிய அதிகாரிகளுடன் மைக்ரோசாப்ட் நிறுவனவத்துடன் இணைய உள்ளதால் இப்பதவியில் புதிய ஆட்களை சேர்க்க இந்நிறுவனம் தீவரமாக இறங்கியது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் தொலைதொடர்பு உபகரண பிரிவின் தலைவரான ராஜிவ் சூரி (இந்தியர்) தான் இப்பதவிக்கு சரியான தேர்வாக இருக்கம் என நோக்கியாவின் நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது.
மைக்ரோசாப்ட் - நோக்கியா
மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவின் சில முக்கிய பரிவுகளை சுமார் 7.5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியதால் இந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.
நிர்வாக குழு
மேலும் இந்த பதவிக்கு சிறந்த ஒரு பணியாளரை நியமிக்க திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் முக்கிய பரிவின் தலைவரான ராஜிவ் சூரி இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
ராஜிவ் சூரி
மிகுதியான லாபம் இல்லாத இந்நிறுவனத்தின் நோக்கிய சொல்யூஷன்ஸ் மற்றும் நெட்வொர்க் பிரிவை ராஜிவ் சூரி தலைமையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான லாபம் அடைந்தது. 2014ஆம் நிதியாண்டில் இப்பிரிவு சுமார் 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடதக்கது.
இந்தியர்கள்
"கற்றவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பது போல இப்போது இப்பழமொழி மாற்றியமைக்கப்பட்டு "இந்தியர் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என திருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த 100 நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதாக சில பத்திரிக்கைகள் இந்தியர்களின் திறமையை பற்றி விமர்சனம் செய்துள்ளது. இந்த விமர்சனத்திற்கு சொந்தமான சில இந்தியர்களை இங்கு பார்போம்.
சத்ய நாதெல்லா
சாப்ட்வேர் துறையின் ஜம்பவான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஒவாக சத்ய நாதெல்லா கடந்த பிப்ரவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திரா நூயி
உலகம் முழுவதும் ரசித்து ருசித்து குடிக்கும் பெப்ஸி குளிர்பானங்கள் நிறுவனத்தின் சிஇஒ இந்திரா நூயி. இவர் உலகின் சக்திவாய்ந்த டாப் 100 பெண்கள் பட்டியலில் இவர் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ராகேஷ் குரான
இந்திய - அமெரிக்க பேராசிரியாரான இவர் உலக புகழ் ஹார்வர்ட் கல்லுரியின் முதல்வராக உள்ளர். இன்னும் பல பேர் உள்ளனர், இப்பட்டியலில் தற்போது ராஜிவ் சூரியும் இடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications