ஆன்லைன் வங்கிச் செயல்பாட்டில் களமிறங்கும் பேஸ்புக்!! வெல்வது கடினம்..

கலிஃபோர்னியா: இளைஞர்களை புத்தகத்தில் அடிமையாக்கி வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம் தற்போது பண பரிமாற்றச் சேவையிலும் இறங்க உள்ளது. இதற்காக இந்நிறுவனம் லண்டனை சேர்ந்த 3 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் ஆன்லைன் மற்றும் மொபைல்களை பயன்படுத்தி கடல் கடந்த பறிமாற்றச்சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.

வோடபோன் நிறுவனம் எம்-பேசா சேவை போல, கூகிள் நிறுவனத்தின் கூகிள் வாலட் சேவை போல பேஸ்புக் இத்தகைய சேவையை அளிக்கவுள்ளது.

பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம்

இச்சேவைக்கான ஒப்புதலை பேஸ்புக் நிறுவனம் சென்ரல் பாங்க் ஆஃப் அயர்லாந்திடம் பெற்றது. இதன் மூலம் பேஸ்புக் வாடிக்கையாளர் தங்கள் கணக்குகளில் பணத்தை வரவு வைத்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும் என பேஸ்புக் நிறுவனம் விளக்குகிறது.

2.1 பில்லியன் பரிவர்த்தனை

2.1 பில்லியன் பரிவர்த்தனை

இதுபோன்ற சேவைகளை அமெரிக்காவில் இந்நிறுவனம் அளித்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஃபார்ம்வைல், கேன்டி கிரஷ் சாக போன்ற கேம்-களுக்கு வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தி வந்தனர். இந்த பரிவர்த்தனைக்கு பேஸ்புக் நிறுவனம் 30 சதவீத கமிஷன் பெற்று வந்தது. 2013ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 2.1 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

10 டிரில்லியன் டாலர் வர்த்தகம்

10 டிரில்லியன் டாலர் வர்த்தகம்

இன்னும் 5 வருடங்களில் பேஸ்புக்கின் இந்த பணவர்த்தகத்தின் மூலம் சுமார் 5 டிரில்லியன் டாலர் முதல் 10 டிரில்லியன் டாலர் வர்த்தகத்தை வரிவுசெய்ய திட்டமிட்டுள்ளது.

போட்டி நிறைந்த சந்தை

போட்டி நிறைந்த சந்தை

இந்த பண பரிமாற்றச் சந்தையில் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன குறிப்பாக பேபால், எம்-பேசா நிறுவனங்கள் இத்துறையில் சிறந்து விளங்குகிறது. மேலும் இப்போது சமுக வலைதளமான டிவிட்டரும் இந்த சந்தையில் குதித்துள்ளது குறிப்பிடதக்கது.

வெற்றி யாருக்கு

வெற்றி யாருக்கு

பொதுவாக பேஸ்புக் நிறுவனம் ஒரு பொழுதுபோக்கு நிறுவனமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை வருவது கடினம். அப்படி பேஸ்புக் நிறுவனம் மக்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் இந்த போட்டி நிறைந்த சந்தையில் வெற்றி கொள்ளவது மிகவும் கடினமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+