லண்டன்: உலகின் டாப் 50 நிறுவனங்களில் நம் இந்தியாவின் டாடா குழுமமும் ஒன்று. இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருதான "தி ஃநைட் கிராண்ட் கிராஸ்" வருது வழங்கப்பட்டது.
பிரட்டனில் செயல்படும் சில பெரிய நிறுவனங்களில் டாடா குழுமமும் ஒன்று. இந்நாட்டு வளர்ச்சிக்கு இந்நிறுவனம் பெருமளவில் உறுதுனையாக இருந்தது. இந்நிறுவனமா சுமார் 60 ஆயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடதக்கது.
எலிசபெத் ராணி
கடந்த 10ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிற்கு இந்நிய நாட்டிற்கு உள்ள நட்பு உரிமையில் அதிகப்படியாக இங்கிலாந்தில் முதலீடு செய்து நாட்டின் வளர்ச்சை உக்குவித்த சிறப்பான செயல்பாட்டிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்க இந்நாட்டின் எலிசபெத் ராணி ஒப்புதல் அளித்தார்.
5 பேர்
இந்த வருடம் இந்த விருதை 5 பேர் பெறுகின்றனர், அதில் ரத்தன் டாடா மட்டும் இந்தியார் என்பது பெருமைக்குரிய விஷயம்.
நைட் கமாண்டர்
இதற்கு முன்பு கடந்த 2009ம் ஆண்டில் "நைட் கமாண்டர்" என்ற விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்வி
மேலும் ரத்தன் டாடா கல்வி துறைக்கு பல சேவைகள் செய்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் அவர் இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸ் கல்லுரியுடன் சேர்ந்து சிறந்த மாணவர்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications