மும்பை: ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்நிறுவனத்தின் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கட்டணங்கள் மாற்றப்படும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே ஒரு நொடிக்கு 1.5 பைசாவாக இருந்த கட்டணம் தற்போது 1.6 பைசாவாக மாற்றப்படும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குருதீப் சிங் தெரிவிக்கையில் "வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவே கட்டணத்தை உயர்த்த உள்ளோம், இதனால் அவர்களுக்கு பெருமளவில் செலவுகள் எதும் ஏற்படாது. இதுமட்டும் அல்லாமல் சிறப்பான் சேவைகளை அளிக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்.
நிறுவன வருவாய்
இந்த கட்டண உயர்வு நிறுவனத்தின் வருவாய்களில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். இதன் எதிரொலி இன்னும் 3 மாதங்களில் தெரியவரும்
கட்டண உயர்வு
தொலைதொடர்பு வல்லுனர்கள் கூறுகையில், இந்த கட்டண உயர்வு அனைத்து நிறுவனங்களுக்கும் லாபமானதாகவே உள்ளது. இதனால் நிறுவனங்கள் அதிகப்படியான லாபம் அடையும் என தெரிவித்தனர்.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, வோடபோன் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியது, இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இதில் அடக்கம். மேலும் இலவச நிமிடங்கள் வழங்குவதில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அதிகளவில் வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications