மும்பை: ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி தனது கார்களுக்கான விலையை 3 சதவீதம் உயர்த்த போவதாக அறிவித்தது. நாணய பறிமாற்றத்தில் ஏற்பட்ட அதிகப்படியான ஏற்ற இறக்கத்தாலும், உள்ளிட்டு செலவுகல் அதிகமானதாலும் இந்த விலை மாற்றம் தேவைபட்டது என இந்நிறுவனம் தெரிவித்தது. இந்த விலை மாற்றம் அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரும் என இந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்தது. (ஆடி, ஆவணி இருக்கட்டும், நமக்கு மாருதி, ஹூன்டாய் காரே போதும்..)
தற்போது உள்ள போட்டி மிகுந்த ஆட்டோமொபைல் சந்தையில், பண பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலின் மூலம் உள்ளிட்டு கட்டணம் மற்றும் செயல்பாட்டு கட்டணம் அனைத்துமே உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் கார்களின் விலையை குறைவான அளவே உயர்த்தியுள்ளதாக இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் ஜோ கிங் தெரிவித்தார்.
ஏ சிரியஸ் வகை கார்கள்
இதனால் மே 1 முதல் ஏ4 டீசல் வகை கார்கள் 32.81 இலட்சத்தில் இருந்து 33.96 இலட்சமாகவும், ஏ6 டீசல் வகை கார்கள் 1.60 இலட்சம் உயர்ந்து 44.91இலட்சமாகவும் உயரவுள்ளது.
ஆர் 8
ஸ்போர்ட்ஸ் வகை கார்களான ஆர்8 டெல்லியில் 1.63 கோடியில் இருந்து 1.68 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் மேலும் உயர வாய்ப்புள்ளது. (1.60 கோடிக்கு அதுல இன்னதான் இருக்கும்ன்னு கேட்ட.. ஸ்பீடு, கெத்து, பந்தா என அல்பமான பதில் தான் வரும். நம்ம ஊர் ரோட்டுல சைக்கிள போறதே கஷ்டம்)
விற்பனையில் கலக்கல்
இந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம் ஜனவரி மார்ச் மாத காலகட்டத்தில் சுமார் 2,740 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை உரிமையை கைப்பற்றியிருக்கும் ஜக்குவார் லேண்டுரோவர் நிறுவனம் இந்தியா மற்றும் உலகளவில் கடும் போட்டியாக உள்ளது குறிப்பிடதக்கது. (பல்லு இருக்குறவே பக்கோடா சாப்பிடுறான்..)
விற்பனையில் 18% உயர்வு
மார்ச் மாத தகவல் படி இந்நிறுவனம் இந்த வருடம் 1404 கார்களை விற்றுள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 1104 கார்களை மட்டுமே விற்றது குறிப்பிடதக்கது.
புதிய ஷோரூம்
இந்தியாவில் விற்பனை அதிகரிக்க துவங்கிய உடன் இந்நிறுவனம் இந்நியாவின் முக்கிய பகுதிகளில் தனது பிரத்தியேக ஷோரூம்களை திறந்தது. இந்த வகையில் ஆடி நிறுவனம் தற்போது உதய்பூர், விசாகப்பட்டினம், நாசிக் ஆகிய பகுதிகளில் தனது கிளையை பரப்பியுள்ளது.
இந்தியா
இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் சகல வகையான கார்களும் கிடைக்கிறது. அந்த வகையில் ஏ4, ஏ6, ஏ7 ஸ்போர்ட்பேக், ஏ8 எல், க்கியூ3 எஸ், க்கியூ3, க்கியூ5, க்கியூ7, எஸ்4, எஸ்6, ஆர்எஸ் 5 கூப், ஆர்எஸ் 7 ஸ்போர்ட்பேக், டிடி கூப், ஆர்8, ஆர்8 ஸ்பைடர், ஆர்8 வி10 பிளஸ் போன்ற கார்கள் இந்தியாவில் கிடைக்கிறது. (இதுல 10 இலட்சத்திற்கு கம்மிய எதாவுது மாடல் இருக்கா பாஸ்??.. )


Click it and Unblock the Notifications