நொய்டா: ஐடி துறையில் கடந்த இரண்டு வருடமாக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இன்று 2014ஆம் நிதியாண்டின் 4ஆம் காலாண்டு அறிக்கைக்கையை வெளியிட்டது. நிறுவனத்தின் செயல்பாடுகளை போலவே நிறுவனத்தின் லாபம் சுமார் 59 சதவீதம் உயர்ந்துள்ளது. நான்காம் காலாண்டிற்கான லாபம் மட்டும் 1,624 கோடி.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஷிவ் நாடார் தலைமையில் நொய்டா-வை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி முதலீட்டாளர் கண்களில் தீப்பொறி பறக்கிறது என்றே கூறலாம். இதனால் கடந்த வருடம் ஏப்ரல் 30ஆம் தேதி 673 ரூபாயிக்கு விற்கப்பட்ட இந்நிறுவன பங்குகள், தற்போது 1432.00 ரூபாயிக்கு விற்கப்படுகிறது.
வருவாய்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்தச வருடம் 6430 கோடி என்ற அளவில் இருந்தது, ஆனால் இந்த வருடம் சுமார் 30 சதவீதம் உயர்ந்து 8349 கோடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
நிகர லாபம்
இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய ஐடி நிறுவன ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த வருடத்தை விட 40 சதவீதம் உயர்ந்து 3246 கோடி வரை உயர்ந்ததுள்ளது.
ஷிவ் நாடார்
நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடுகையில் பேசிய ஷிவ் நாடார் "ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பிற நிறுவனங்களை போல செயல்படுவதில்லை, இந்நிறுவனம் சிறு மற்றும் குறு நிறுவனங்களிடம் இருந்து அதிகப்படியான ஆடர்களை பெற்றுள்ளதால் சிறப்பான வளர்ச்சியுடன் நிலையான லாபங்களுடன் உள்ளது."
பணியாளர்கள்
இந்நிறுவனத்தில் தற்போது 84,403 பணியாளர்கள் உள்ளனர், இது கடந்த 2004ஆம் ஆண்டில் 90,190 பணியாளர்கள் இருந்ததாக இந்நிறுவனத்தின் தகவல்கள் கூறுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications