மும்பை: இந்தியா விமான போக்குவரத்து துறை கடந்த சில மாதங்களாகவே கொதிக்கும் எண்ணெயில் தண்ணிர் தெளித்தது போலவே இருக்கிறது. இதற்கு காரணம் விமான நிறுவனங்கள் தரும் அதிரடியான சலுகைகள் தான். ஜனவரி மாதத்தில் சன் டிவி புகழ் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவங்கிய இந்த திட்டங்களில் இப்போது அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது என்றே சொல்லாம்.
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவின் மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவே இத்தகைய சலுகைகளை வழங்குகிறது போல.
முன்று நாள் சலுகை
ஏப்ரல் 16 முதல் 18 வரை ஒரு சிறப்பு சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 10 செல்ல டிக்கெட்களை பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்களப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்கள்
இந்த சலுகை இந்நியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், அவுரங்காபாத், கோவா, இந்தூர், மும்பை, புனே, சூரத் ஆகிய பகுதிகளில் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த முன்று மாதத்தில் இது 7வது விலை சலுகை என்பது குறிப்பிடதக்கது.
வாடிக்கையாளர்
இந்நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரம் பெறுக்கவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், விரைவில் பிரபலம் ஆகவும் இத்தகையை சலுகைகளை வழங்கி மக்களை கவர ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. (குங்குமம், தினகரன் பத்திரிக்கைகளை பிரபலமாக்க மக்களுக்கு சில இலவசங்கள் வழங்கி சன் குழுமம், இப்போது தனது விமான சேவையிலும் இத்தகையை சலுகைகளை வழங்குகிறது.)
வாடிக்கையாளர் சேவையில் மாக மட்டம்...
சலுகைகள் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்வது மிகவும் சுலபம், ஆனால் வாடிக்கையாளர் கொடுத்த காசுக்கு சிறந்த சேவை அளிக்க தவறிவருக்கிறது ஸ்பைஸ்ஜெட்!! (இலவசங்களை கண்டு ஏமாறும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். ஐந்து வருட ஆட்சியையும் இத்தகைய இலவசங்களுக்காக இழக்காதிர்கள்.. சிந்திப்பீர்... வாக்களிப்பீர்.. )
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications