700 ஊழியர்களுக்கு கட்டாய விஆர்எஸ்!! நோக்கிய நிறுவனத்தின் அவல நிலை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மொபைல் உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நோக்கியா நிறுவனம் தற்போது அதன் உண்மையான நிலை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையின் வரி நிலுவை செலுத்த முடியாமல் நிற்கிறது. இதனால் தொழிற்சாலை முடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நோக்கியா நிறுவனம் தனது நிறுவன செலவீனங்களை குறைத்துக்கொள்ள முற்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் 700 பணியாளர்களுக்கு விஆர்எஸ் (விருப்ப ஓய்வு திட்டம்) அளிக்க நோக்கிய நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த செய்தி நிறுவனத்தின் யூனியன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை தொழிற்சாலை

சென்னை தொழிற்சாலை

இந்த தொழிற்சாலை வருமான வரி துறைக்கும் மற்றும் மாநில அரசுக்கும் அளிக்கவேண்டிய வரி நிலுவை பல ஆயிரம் கோடிகள் உள்ளது. இதனால் இந்த தொழிற்சாலை முடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 8,000 பேர் வேலை செய்கின்றனர்.

ஊழியர்களின் போராட்டம்

ஊழியர்களின் போராட்டம்

இந்த 8000 பணியாளர்களில் முதலில் 700 பேருக்கு நிறுவனம் விஆர்எஸ் அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து நிறுவன ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தின. ஆனால் நிறுவன செயல்பாடு மிகவும் மோசமானதால் போராட்டங்களும் பலன் அளிக்கவில்லை.

நோக்கியா நிறுவனத்தின் சலுகை

நோக்கியா நிறுவனத்தின் சலுகை

நோக்கியா நிறுவனம், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விஆர்எஸ் பெறும் வாய்பை அளித்துள்ளது குறிப்பிடதக்கது.

மைக்ரோசாப்ட் நிறுவனம்
 

மைக்ரோசாப்ட் நிறுவனம்

நோக்கியா நிறுவனத்தின் சில முக்கிய பிரிவுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 7.2 பில்லியன் டாலர்களுக்கு கைபற்றியது உண்மை தான். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஊழியர்களை எதும் குறிப்படபடவில்லை. தற்போது ஊழியற்களின் நிலை தான் கேள்விக்குரியாகி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

700 trainees in Nokia Chennai plant opt for VRS

Around 700 trainees at Nokia's Sriperumbudur facility near Chennai have opted for the voluntary retirement scheme (VRS) announced by the company recently, union sources said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X