இந்தூர்: இன்றைய நடைமுறையில் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதே கடினமாக இருக்கும் வேலையில், படிப்பை முடிக்கும் முன்னரே 32 இலட்ச சம்பளத்தில் வேலை. ஆனால் இவர் பிடிப்பது இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் இந்தூர் கல்லூரியில்.
கடந்த வருடம் மாதம் 2 இலட்சம் என வருடத்திற்கு 24 இலட்சம் தான் இந்தியாவில் அதிகப்படியான சம்பளமாக இருந்தது குறிப்பிடதக்கது. ஆனால் 32 இலட்சத்திற்கு முன்பு இது சாதரணம் என்று இக்கல்லூரியின் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த மாணவர்??
இந்த மாணவர் பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது ஐஐஎம் ஆசிரியர்கள் தகவல் வெளியிட மறுத்துவிட்டனர். இவர் இக்கல்லூரியின் 2012-14ஆம் ஆண்டு மாணவர் என்று மட்டும் கல்லூரி தெரிவித்தது.
475 மாணவர்கள்
இந்த கல்லுரியில் இந்த வருடம் வெளிவரும் 475 மாணவர்களுக்காக பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்குபெற்றது. இந்த வேலை வாய்ப்பில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு சராசரியாக 12.13 இலட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது.
152 நிறுவனங்கள்
இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் இந்தியாவின் சிறந்த மேலான்மை பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க சுமார் 152 நிறுவனங்கள் வந்து குவிந்தன. இதில் டாப் 41 நிறுவனங்கள் மட்டும் முதற் கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டன.
வேலைவாய்ப்பு
இதில் 26 சதவீத வேலைவாய்ப்புகள் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவில இருந்தது, 24 சதவீதம் கன்செல்டிங் பரிவில் இருந்தது. மேலும் 20 சதவீதம் பைனான்ஸியல் துறையிலும், 13 சதவீதம் பொது மேலான்மை துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறையில் இருந்தது என இக்கல்லுரி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications