டெல்லி: இந்தியாவின் முன்றாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமாக கருதப்படும் விப்ரோ தனது 4ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக 2,227 கோடி ரூபாய் பெற்றுள்ளது, கடந்த காலாண்டில் 2014.7 கோடி மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடதக்கது. எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகை நான்காம் காலாண்டில் விப்ரோவின் வரிக்கு பிந்தைய லாபம் 2,080 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும் என கணித்திருந்தது. இந்த கணிப்பை தவிடு பொடியாக்கியது விப்ரோ.
நிறுவன லாபத்தில் சுமார் 29 சதவீதம் உயர்ந்தது கணிப்புகளை தகர்த்து எரிந்தது. மேலும் இந்திய ஐடி துறையில் இந்நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.
சாப்ட்வேர் விற்பனை அதிகரிப்பு
விப்ரோ நிறுவனத்தின் மென்பொருள் விற்பனை 2014ஆம் நிதியாண்டில் நான்காம் காலாண்டில் மிகவும் சிறப்பாக அமைந்தது என்றே சொல்லாம் இதனால் மென்பொருள் விற்பனையின் மதிப்பு 11,704 கோடியை தொட்டது. கடந்த காலாண்டில் இதன் மதிப்பு 140,237.4 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.
ஆடர்களை பிடிக்க கடும் போட்டி
விப்ரோ நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்திடம் கத்தியும், துப்பாக்கியும் இல்லாமல் அமைதியாக ஆடர்களை பிடிக்க போர் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வங்கிச் சேவையில் விப்ரோ நிறுவனத்தின் அதிக்கம் சற்றும் குறையாமல் உள்ளது.
பங்கு விலை நிலவரம்
இன்றைய வர்த்தகம் முடியும் தருவாயில் விப்ரோ நிறுவன பங்குகள் 13.65 புள்ளிகள் உயர்ந்து 585.55 ரூபாயிக்கு விற்கப்படுகிறது.
லாபம்
இந்நிறுவனத்தின் லாபத்தில் 90 சதவீதம் வெளிநாடுகளின் மென்பொருள் நிறுவனங்களுக்கு அளிககும் சேவைகளில் இருந்து கிடைப்பவை. இந்தியாவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மிகவும் குறைவாகவே உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications