இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பொது துறை வங்கி அதிகாரிகள் நிதியமைச்சகத்திடம் வங்கிகளுக்கு 5 வேலைநாட்கள் மட்டும் போதுமானது, இதனால் வங்கிகளுக்கு வாரம் 5 வேலை நாட்களாக குறைக்க சில முக்கிய பரிந்துறைகளுடன் மனுவை அளித்துள்ளது.

 

வங்கியின் வார வேலை நாட்களை 5ஆக குறைப்பதால் பல வகையில் வங்கித் செலவுகளை குறைக்கலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் விரைவில் முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

நிதியமைச்கத்தின் கவலை

நிதியமைச்கத்தின் கவலை

வாரத்தில் சனிக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடுத்தால் வங்கி செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படும், மக்களுக்கும் பெறும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்காவதாக இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.

வங்கிகளின் அதிரடியான பதில்

வங்கிகளின் அதிரடியான பதில்

இப்போதெல்லாம் அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும் 24x7 மணிநேரமும் செயல்படும் இணையச் சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவை அளித்து வருகிறது,இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெரு மூலைக்கும் ஒரு ஏடிஎம் உள்ளது. இதனால் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்படாது என வங்கித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். (சரி வேலை நாட்கள் குறைந்தால் அவர்களின் சம்பளம் குறையுமா??)

பொது துறை வங்கிகளின் கருத்து
 

பொது துறை வங்கிகளின் கருத்து

இந்தியாவின் சிறந்த பொதுத் துறை வங்கிகள் என போற்றப்படும் வங்கிகளும் இத்திட்டத்தை ஆதரிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் வங்கி செயல்பாட்டில் அதிகப்படியான பணத்தை சேமிக்கப்படும் என நிதியமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. (என்ன கொடும சார் இது!!)

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள்

பெரும்பாலான மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். ஏன் இந்த சலுகையை வங்கி அதிகாரிகள் அனுபவிக்க கூடாது என வர்த்தக பிரிவு அதிகாரிகள் கேள்வி ஏழுப்பியுள்ளனர்.

5 நாட்கள் வேலை

5 நாட்கள் வேலை

1985ஆம் ஆண்டு மத்திய அரசு, நிர்வாகத்தில் திறனை அதிகரிக்க வாரத்தில் 5 வேலைநாள் திட்டத்தை அறிமுகபடுத்தியது.

வங்கி பணியாளர்கள்

வங்கி பணியாளர்கள்

ரிசர்வ் வங்கியின் மார்ச் 2012ஆம் ஆண்டின் தகவல் படி இந்தியாவில் 169 வங்கியில் சுமார் 11,75,149 பணியாளர்கள் வேலைசெய்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Public sector bankers plan to ask Finance Ministry for 5-day week

Executives from State-owned banks seem determined to prove to the Finance Ministry that a five-day work week is feasible in the banking sector.
Story first published: Saturday, April 19, 2014, 13:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X