ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 4.7% உயர்வு!!
மும்பை:ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் 2013ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. நான்காம் காலாண்டில் இந்நிறுவனம் மொத்த லாபமாக 5,631 கோடி ரூபாய் பெற்றது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5,589 கோடி ரூபாய் பெற்றது குறிப்பிடதக்கது.

உலகின் டாப் 100 நிறுவனங்களில் நம் இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் ஒன்று. இந்நிறுவனம்
இந்நிறுவனம் இதே காலாண்டில் தனது விற்றுமுதல் (Turnover) 13 சதவீதம் உயர்ந்து 97,807 கோடியாக உயர்ந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் இந்நிறுவன பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 9.50 ரூபாய் கொடுத்துள்ளது. 2013ஆம் ஆண்டின் லாபம் 4.7 சதவீதம் உயர்ந்து 21,984 கோடி ரூபாயாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications