டெல்லி: இந்தியாவில் கேட்பரி சாக்லேட்களை விற்பனைக்கு கொண்டு வரும் மான்டேலிஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தனது பெரை மான்டேலிஸ் இந்தியா புட்ஸ் லிமிடெட் ஆக தனது பெயரை மாற்றிக்கொண்டது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது, இந்நிறுவனத்தில் சுமார் 100,000 பணியாளர்கள் மேல் பணியாற்றுகின்றனர்.
இதுவரை மான்டேலிஸ் நிறுவனம், இந்தியாவில் ஒரு அன்னிய நாட்டு நிறுவனமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் இந்திய கிளையாக செயல்பட மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றதை தொடந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனர்
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மனு அனந்து கூறுகையில் "மான்டேலிஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இந்திய நிறுவனமாக செயல்பட கடந்த 2 வருடமாக இதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்"
பெயர் மாற்றம்
மேலும் இதனால் கேட்பரி நிறுவனத்தின் சாக்லெட்களில் பெயர் மாற்றம் செய்யப்படும். விற்பனை பொருட்களின் பின்புறத்தில் புதிய பெயரை அச்சடிக்கப்படும்.
மான்டேலிஸ் இந்தியா புட்ஸ் லிமிடெட்
மான்டேலிஸ் இந்தியா புட்ஸ் லிமிடெட் இந்தியாவில் டெய்ரி மில்க், 5 ஸ்டார், ஜெம்ஸ், போர்ன்வைல், பெர்க், செலிபிரேஷன்ஸ், சாக்கோலரிஸ், ஹல்ஸ், போர்ன்விட்டா, தாங் மற்றும் ஒரியோ ஆகிய தின்பன்டங்களை விற்பனை செய்து வருகிறது.
முதலீடு
மான்டேலிஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகானத்தை தலைமையிடமாக செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் முன்பைவிட அதிகளவில் முதலீடு செய்யதிட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம் வெளியீடும் டெய்ரி மில்க் வகை சாக்லெட்கள் மிகவும் சிறப்பான முறையில் விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்படுவதால் மேலும் சில டெய்ரி மில்க் வகைகளை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications