மல்லையாவிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டிஸ்!! பணியாளர்களுக்கு விடிவு காலம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கிங்பிஷர் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு இந்நிறுவனம் பல மாதமாக சம்பளம் தரவில்லை இது நாம் அனைவரும் அறிந்ததே. இதனை எதிர்த்து கிங்பிஷர் நிறுவனத்தின் ஊழியர்கள் எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தினர். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் மல்லையா ஜாலியாக சுற்றி வருகிறார். இந்நிலையில் கிங்பிஷர் நிறுவனத்தின் 3 பைலட்கள் மட்டும் தனியாக டெல்லி நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

இந்த வழக்கு தற்போது அதிரடியான தீர்ப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மற்ற ஊழியர்களும் இதேபோன்று வழக்குகள் தொடர முடிவு செய்துள்ளனர்.

கேப்டன் சஞ்சீவ்

கேப்டன் சஞ்சீவ்

5 மாத சம்பள நிலுவையான 26 இலட்சத்திற்காக இந்நிறுவனத்தின் விமான கேப்டன் சஞ்சீவ் குமார் வழக்கு தொடுத்ததில், ராஜவ் சஹய் தலைமையிலான நிதிமன்றம் நிலுவை தொகையும் அதற்கு 10 சதவீதம் வட்டியுடன் செலுத்தும் படி கிங்பிஷர் நிறுவனத்திற்கு தீர்ப்பளித்துள்ளது. (மல்லையா: தீர்ப்பு கொடுத்தா காசு கொடுக்கனுமா.. போயா..)

குடும்ப நிலைமை

குடும்ப நிலைமை

இந்த சம்பள நிலுவையால் சஞ்சீவ் குமாரின் குடும்ப நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், நிதி சுமையை குறைக்க குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் செலவு செய்து வருவதாக அவரின் வழக்கறிஞர் எம்.கே, கோஷ் தெரிவித்தார்

சஞ்சீவ் குமார் பணிக்காலம்
 

சஞ்சீவ் குமார் பணிக்காலம்

சஞ்சீவ் குமார் கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் நாள் கிங்பிஷர் நிறுவனத்தில் மாதம் 4.3 இலட்சம் ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். இவர் இந்நிறுவனத்தின் ஏர்பஸ் 320 விமானத்திற்கு விமானியாக நியமிக்கப்பட்டார். பின்பு நிறுவன செயல்பாடுகளை கவணித்த அவர் பிப்ரவரி 1, 2012ஆம் ஆண்டு தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 6 மாத நோட்டிஸ் காலத்தில் பணியாற்ற அவர் ஜூலை 31, 2012ஆம் ஆண்டு வெளியேறினார். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் இவருக்கான சம்பளம் தரவில்லை.

சம்பள தொகை

சம்பள தொகை

இந்த 6 மாதத்திற்கான சம்பளம் மட்டும் 25,37,500 ரூபாய் இதற்கு 10 சதவீத வட்டியுடன் கிங்பிஷர் நிறுவனம் அளிக்க நிதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் கூட்டு மனுவாக இதர இரண்டு கேப்டன் ஆதித்தயா ஜூகல் மற்றம் கேப்டன் அமர் பாத்தியாவின் மனுக்களும் அளிக்கப்பட்டது. அவர்களுக்கும் அதே தீர்ப்பு தான்.

பணியாளர்களின் மன நிலை

பணியாளர்களின் மன நிலை

இந்நிறுவனத்தின் பணியாற்றிய 1000 த்திற்கு மேற்றபட்ட பணியாளர்களின் நிலையும் இதே தான். ஒவ்வொருவரும் தங்களின் குடும்ப நிலை மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. விமான நிறுவனத்தில் பணியாற்றிய அனைவரும் சொகுசான வாழ்க்கை முறையில் வாழ்வதனால் இத்தகைய இழப்பு இவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

 மல்லையா மைன்டு வாய்ஸ்

மல்லையா மைன்டு வாய்ஸ்

என்கிட்ட காசு வாங்க 17 கம்பேனி என்ன வலை வீசி தேடிக்கிட்டு இருக்கு, ஒரு பய கிட்ட சிக்கல. நீங்க முனு பேரும் என்னட சுண்டக்க பசங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delhi High Court orders Kingfisher Airlines to pay outstanding salaries to pilots

The Delhi High Court has directed the grounded Kingfisher Airlines to pay the outstanding salaries of three of its ex-pilots who had moved the court over non-payment of salaries.
Story first published: Monday, April 21, 2014, 17:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X