துபாய்: கட்டுமானம், வர்த்தகம், ஆடம்பர விடுதிகள் இவை அனைத்தும் பெயர் போன இடம் துபாய்.
துபாய் ரியல் எஸ்டேட்டில் 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியார்கள் மற்றும் இந்தியா நிறுவனங்கள் சுமார் 1.6 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மெத்த முதலீட்டு தொகையில் இந்தியர்களின் பங்கு அதிகம் என அந்நாட்டு அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடமும் இந்தியர்களின் முதலீடு தான் அதிகமாக இருந்தது குறிப்பிடதக்கது.
111 நாடுகள்
2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 111 நாடுகள் ரியல் எஸ்டேட் துறையில் பங்குபெற்றுள்ளதாக துபாய் லேண்டு டிப்பார்ட்மென்டு தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள்
துபாய் மண்ணில் முதலிடு செய்ய பிறநாட்டவர்களில் இந்தியர்களின் பங்கு எண்ணிக்கையிலும் சரி, தொகையிலும் சரி மிகவும் அதிகம். இக்காலாண்டில் மட்டும் 2,414 இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் 1.6 பில்லியன் டாலர்களை அல்லது 5.895 பில்லியன் திர்ஹம்ஸ் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த முதலீட்டாளர்களில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களும் அடக்கம்.
பிரட்டன், பாகிஸ்தான்
இந்தியாவை தொடர்ந்து துபாயில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் பிரட்டன் 3.145 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீட்டுடன் முன்றாம் இடத்திலும், பாகிஸ்தான் 2.410 பில்லியன் திர்ஹம்ஸ் முதலீட்டுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
ஏமிரேட்ஸ்
மொத்தத்தில் துபாயில் அதிகளவில் முதலீடு செய்த நாடு என்று பார்க்கும் போது அதன் துணை நாடுகளான எமிரேட்ஸ் பகுதிகள் முதல் இடத்தில் உள்ளன. பிற நாடுகள் என்று பார்க்கும்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது.
9.5 பில்லியன் டாலர்
நடப்பு நிதியாண்ட்ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதிகள் மற்றும் பிற நாடுகள் என ஒட்டுமொத்தமாக 9.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 57 சதவீதம் அதிகமாகும். கடந்த வருடமும் இந்தியர்களின் முதலீடு அதிகளவில் இருந்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?



Click it and Unblock the Notifications