மும்பை: மஹிந்திரா குழுமம் இந்தியாவில் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது, குறிப்பாக ஆட்டோமொபைல், கனரக வாகன உற்பத்தி, சாப்ட்வேர், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வங்கித் துறை. மேலும் இக்குழுமத்தின் டெக் மஹிந்திரா நிறுவனம் துவண்டுபோன சத்யம் நிறுவனத்தை கைபற்றிய பின்பு சாப்ட்வேர் துறையில் மிகவும் வேகமாக வளர துவங்கியது.
இந்நிலையில் டெக் மஹிந்திரா நிறுவனம், அமெரிக்காவின் பிக்ஸ் ஸ்டிரிம் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை சமார் 10 மில்லியன் டாலருக்கு அதாவது 60 கோடி ரூபாய்க்கு கைபற்றியுள்ளது.
75% பங்குகள்!!
திங்கட்கிழமை மாலை நேரத்தில் இத்தகவலை டெக் மஹிந்திரா நிறுவனம் உறுதிபடுத்தியது. மேலும் இந்நிறுவனம் பிக்ஸ் ஸ்டிரிம் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை முழுமையாக கைபற்றவில்லை, நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை மட்டுமே கைபற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
பிக் டேட்டா
பிக்ஸ் ஸ்டிரிம் நெட்வொர்க்ஸ் நிறுவனம் உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிக் டேட்டா சேவைகள் அளித்து வருகிறது, இத்தகைய சேவை டெக் மஹிந்திரா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என டெக் மஹிந்திரா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறுவன கைபற்றுதல்
இந்நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் பிக்ஸ் ஸ்டிரிம் நெட்வொர்க்ஸ் நிறுவனம் மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனங்கள் இரண்டும் இணைந்து பல புது கண்டுபிடிப்புகளில் இறங்க உள்ளோம் எனவும் டெக் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்தது.
டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்
2014ஆம் ஆண்டு துவக்கத்தில் வன்பொருள் அதாவது சிப்புகளை தயாரிக்கும் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெங்களுரில் ஒரு புதிய தொழிற்கூடத்தை உருவாக்க டெக் மஹிந்திரா நிறுவனம் தனது பணிகளை துவங்கியது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் வளர்ந்து வரும் இணையதள உலகை எதிர்கொள்ள பல தயாரிப்புகளை செயல்படுத்த முற்பட்டுள்ளது.
பிக்ஸ் ஸ்டிரிம் நெட்வொர்க்ஸ்
இந்நிறுவனத்தை 2013ஆம் ஆண்டு சமீர் பாதே மற்றும் அபின்யா பாதே அகியோர் துவங்கினர், இதற்கு முன்னர் இவ்விருவரும் சிஸ்கோ நிறுவனத்தின் பணியாற்றினர் என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications