வங்கி வைப்பு நிதிகளை தூக்கி சாப்பிடும் சில முதலீட்டு திட்டங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சந்தைகளின் அபாயங்களைப் பற்றி மிகவும் யோசிக்கும் முதலீட்டாளராக இருந்து, உங்களுடைய பணத்தை வங்கி பிக்ஸட் டெபாசிட்களில் முழுமையாக போட்டு வைத்திருப்பவரா? ஆம் என்றால், உங்களின் முடிவு சரியானது அல்ல என்பது தான் உண்மை.

 

பணவீக்கத்தையும் தாண்டி அதிகமான இலாபம் தரும் வழிமுறையை இங்கே கண்டு கொள்ளுங்கள். பாரம்பரியமான பிக்ஸட் டெபாசிட்களிலிருந்து மாறுபட்டு அதிகமான இலாபங்களைத் தரக்கூடிய விஷயங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம் தெரிந்துகொள்ளுங்கள்.

கம்பெனி பிக்ஸட் டெபாசிட்கள்

கம்பெனி பிக்ஸட் டெபாசிட்கள்

வங்கிகளில் வழங்கப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்சம் 9.5 சதவீதம் வட்டி தரப்படுகின்றன. ஆனால், கம்பெனி பிக்ஸட் டெபாசிட்களில் இதைவிட அதிகமான வட்டிகள் தரப்படுவதால், அதிகமான இலபாங்களைப் பெற முடியும். ஆனால், கம்பெனி பிக்ஸட் டெபாசிட்கள் வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட்களை விட பாதுகாப்பு குறைந்தவை என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

உதாரணம்

உதாரணம்

கேரள சாலைப் போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகமானது 25 இலட்சத்திற்குள் செய்யப்படும் 1, 2 மற்றும் 3 வருடங்களுக்கான பிக்ஸட் டெபாசிட்களுக்கு 10.25 சதவீதம் வட்டியை வழங்குகிறது. இந்த டெபாசிட்களுக்கு கேரள அரசு உத்தரவாதம் அளிப்பதால், இந்த டெபாசிட் மிகவும் பாதுகாப்பானதாகும். அதேபோல மகிந்திரா பைனான்ஸ், தமிழ்நாடு பவர் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும் கூட வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட அதிகமான வட்டியை தங்களுடைய பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகின்றன.

மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (non-convertible debentures)
 

மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (non-convertible debentures)

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பிக்ஸட் டெபாசிட்களாக மாற்ற முடியாத பத்திரங்கள் (Non convertible debentures) உள்ளன. இந்த பத்திரங்களை தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அளவுகளில் வழங்குகின்றன.

உதாரணம்

உதாரணம்

இந்தியா இன்போலைன் அல்லது ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஆகியவற்றின் NCDகளை வாங்கி 12 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை உங்களால் பெற முடியும். இந்த வகையில் சாதாரண வங்கி பிக்ஸட் டெபாசிட்களை விட அதிகமான இலாபத்தை உங்களால் பெற முடியும்.

வரி விலக்கப்பட்ட பத்திரங்கள் (tax free bonds)

வரி விலக்கப்பட்ட பத்திரங்கள் (tax free bonds)

20 முதல் 30 சதவீதம் வரையில் வரி செலுத்தும் பிரிவுக்குள் நீங்கள் இருந்தால், வரி விலக்கப்பட்ட பத்திரங்களில் முதலீடு செய்யலாம். வரி விலக்கப்பட்ட பத்திரங்கள் பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பத்திரங்களை கணிசமான விலையில் வாங்கினால், 9 சதவீதம் அளவிற்கு வரி விலக்கப்பட்ட இலாபத்தைப் பெற முடியும். இப்பொழுது, வங்கிகளில் முதலீடு செய்துள்ள பிக்ஸட் டெபாசிட்களின் வட்டி வருமானத்திற்கு நீங்கள் வரி செலுத்துவீர்கள். ஆனால் இந்த பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிகள் கிடையாது.

வரிப்பணம் மிச்சம்

வரிப்பணம் மிச்சம்

வங்கிகளில் 10 சதவீதம் வட்டியை பெறும் நிலையில், நீங்கள் 20 முதல் 30 சதவீத வரி செலுத்தும் பிரிவில் இருந்தால், வரி செலுத்தியது போக மீதமாகும் வட்டி 8.2 சதவீததத்திலிருந்து, 7.3 சதவீதம் வரையிலும் இருக்கும். ஆகையால், வரி செலுத்தியது போக உங்களுக்கு கிடைக்கும் இலாபம் வரி விலக்களிக்கப்பட்ட பத்திரங்களின் வட்டி வருமானத்தை விட குறைவானதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 debt instruments that can offer higher returns than bank fixed deposits

If you are a risk averse investor, who chooses to park all your money in fixed deposits, than you must invest in such a way, so as to ensure you beat inflation and maximize your returns.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X