மும்பை: 2013-14 ஆம் ஆண்டில் கார் ஏற்றுமதில் 17 சதவிகித வளர்ச்சியடைந்த மாருதி சுசுகி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம். ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து முதல் நிலை வகிக்கிறது.
நிஸ்ஸான் நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1.18 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தது. மாருதி நிறுவனத்தின் ஏற்றுமதி 16 சதவிகிதம் குறைந்து அதற்கு முந்தைய ஆண்டு அளவான 118,857 எண்ணிக்கையில் இருந்து 99,832 என்ற அளவிற்குக் குறைந்தது.
அதிகப்படியான வரி விதிப்பு
அல்ஜீரிய நாட்டின் புதிய விதி முறைகளும், ஆப்ரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகளுடன் செய்துள்ள உகந்த வரி விதிப்பு ஒப்பந்தங்களும் இதற்கு ஒர் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்திய கார்களை ஒப்பிடுகையில் ஐரோப்பிய கார்களுக்கு 10 முதல் 20 சதவிகித குறைந்த வரியே விதிக்கப்படுகின்றன.
5.50 லட்ச கார்கள் ஏற்றுமதி
இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்க விவரங்களின் படி, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 5.50 லட்சமாக இருந்தது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரும் கார் ஏற்றுமதியாளரான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், விற்பனையில் 10.2 சதவீத சரிவுடன் 2.33 லட்சம் கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. இது கடந்த ஆண்டின் 2.56 லட்சத்தை ஒப்பிடுகையில் குறைவாகும்.
டொயோட்டா
டொயோட்டா கிர்லாஸ்கர் மற்றும் வோல்க்ஸ்வாகன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஏற்றுமதி உயர்வைக் கண்டபோதும் அளவில் சிறியதாகவே இருந்தது. டொயோட்டாவின் கார் ஏற்றுமதி 16.31 சதவிகிதம் உயர்ந்து 27,266 எண்ணிக்கையை எட்டியது, அதேபோல் வோல்க்ஸ்வாகன் கார் ஏற்றுமதி 32,588 கார்களாகவும் உயர்ந்தது.
நிஸ்ஸான் - டாட்சன்
நிஸ்ஸான் நிறுவனம் டாட்சன்-உடன் இணைந்த காரணத்தால் கட்ந்த இரண்டு வருடமாக ஏற்றுமதியில் சற்று உயர்வை கண்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications