தமிழ்நாட்டு (குடி)மக்களின் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு"

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறுவதால் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் தமிழ்நாட்டில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த நம் தமிழ்நாட்டு குடிமக்கள் திங்கட்கிழமை காலை முதல் டாஸ்மாக் கடைகளில் வரிசைக்கட்டி நின்றனர்.

 

திங்கட்கிழமை மாலை நேரங்களில் கூட்டம் மிகுந்த கடைகளில் காவல்துறை பாதுகாப்புடன் மிகவும் அமைதியான முறையில் விற்பனை நடைபெற்றது. இதன் விளைவு??

தமிழ்நாடு அரசுக்கு வருவாய்

தமிழ்நாடு அரசுக்கு வருவாய்

தான் சம்பாதித்த பணத்தில் பாதியை மத்திய அரசிற்கு வரியாகவும், மிதமுள்ள பாதியை டாஸ்மாக்கில் செலவழிக்கிறாகள் நம் மக்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு 173 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் 25 முதல் 35 சதவீதம் வரை அரசிற்கு லாபமாக கிடைக்கும். (இது கடமை)

டாஸ்மாக் கடை உரிமையாளர்கள்

டாஸ்மாக் கடை உரிமையாளர்கள்

இந்த விற்பனையில் டாஸ்மாக் கடை உரிமையாளர்களுக்கு உச்சகட்ட லாபம் (இது கண்ணியம் ). உதரணமாக டாஸ்மாக் கடைகளில் ஒரு பீர் ரூ.100 கடை உரிமையாளர்கள் விற்பதோ ரூ.110 கூட்டம் அதிகமாக இருக்கும் தருவாயில் ரூ.120 வரை விற்கப்படும். இப்போது பிளாக்கில் அதே பீர் ரூ.150 விற்கப்படுகிறது. (கூட்டி கழிச்சிப் பார்.. நம்ம பாக்கெட் ஒட்டையாகும்.. )

புள்ளிவிபரம்
 

புள்ளிவிபரம்

இந்த விற்பனையை குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில் திங்கட்கிழமையன்று ஒரு நாள் மட்டும் 4.11 இலட்ச மதுபாட்டில்கள் விற்கப்பட்டுள்ளது, இதுமட்டும் இல்லாமல் 1.22 இலட்ச பீர் பாட்டில்கள் விற்கப்பட்டதாக தெரிவித்தனர். (இது திங்கட்கிழமை கணக்கு.. இன்றைய கணக்கு வியாழக்கிழமைதான் தெரியும்)

வருவாய் சாதனை

வருவாய் சாதனை

இந்த வருட துவங்கியதில் இருந்து திங்கட்கிழமை செய்த 173 கோடி ரூபாய் வசூல்தான் அதிகமாம். இதற்கு முன் ஏப்ரல் 14ஆம் தேதி 101 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடதக்கது. (இது கட்டுப்பாடு)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TASMAC sales Up by Rs 173 Crore in a Day

The outlets of the TASMAC (Tamil Nadu State Marketing Corporation) recorded sales totalling 173 crore on Monday, ahead of polling day April 24.
Story first published: Wednesday, April 23, 2014, 16:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X