மும்பை: நம்மை எல்லோரையும் புத்தகத்தில் முழ்கடித்த பேஸ்புக் நிறுவனம் மொபைல் மெசேஜ் அப்ளிகேஷன் நிறுவனமான வாட்ஸ் அப் நிறுவத்தை கைபற்றியது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பேஸ்புக் வலைதளத்தில் வாடிக்காயாளர் எண்ணிக்கை கண்மூடித்தனமாக உயரும் தருவாயில் வாட்ஸ்அப் நிறுவனத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 500 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஜான் கோம் தனது வலைபக்கத்தில் தெரிவிக்கையில் "எங்களின் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இன்றளவில் எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 500 மில்லியனாக உயர்ந்துள்ளது" என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
4 நாடுகள்
பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்த பிறகு பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப்பின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.
பரிமாற்றம்
தினமும் இந்த ஆப்ளிகேஷனில் 700 மில்லியன் போட்டோக்கள், 100 மில்லியன் விடியோக்கல் தொடரந்து வாடிக்கையாளர் மத்தியில் பகிர்ந்துக் கொள்ளபடுகிறது.
வேகமான வளர்ச்சி
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாட்ஸ்அப் பயனிட்டாளர்கள் 200 மில்லியன் மட்டுமே இருந்தார்கள். தற்போது ஒரு வருடதிறக்கும் குறைவான காலகட்டத்தில் இரு மடங்கிற்கும் அதிகமான வளர்ச்சியை வாட்ஸ்அப் அடைந்துள்ளது.
வருவாய்
இந்த வேகமான வளர்ச்சியால் இந்நிறுவனத்தின் வருவாய் 20 மல்லியன் டாலருக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications