மும்பை: இந்திய வங்கித் துறையில் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், 2014ஆம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் சுமார் ரூ.2,650 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,304 கோடியாக இருந்தது.
இதனால் இந்நிறுவனத்தின் லாபம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. நிதியியல் வல்லுனர்கள் எதிர்பார்ப்பை மிஞ்சிய இவ்வங்கியின் லாப வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்த லாபம்
இந்நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 18 சதவிதம் உயர்ந்து 11,041 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடன் தொகை
மேலும் இவ்வங்கி இந்த வருடம் சுமார் 3.4 இலட்சம் கோடி ரூபாயை மக்களுக்கும், நிறுவனங்களுக்கு கடனளித்துள்ளது. இந்த கடன் தொகை அளிப்பிள் சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
செயல்படா சொத்துக்கள்
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தா கோச்சார் தெரிவிக்கையில் வங்கித்துறைக்கு மிகவும் சவாலாக இருக்கும் செயல்படா சொத்துக்களின் பாதிப்பு எங்கள் வங்கியை பெரிதும் பாதிக்கவில்லை என்றி தெரிவித்தார்.
கடந்த வருடத்தை விட இந்த நிதியாண்டில் செயல்படா சொத்துக்களின் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது.
பங்கு லாபம்
இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு 23 சதவீதம் டிவிடன்டு தொகை வழங்கப்படும். மேலும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்கு சந்தையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications