டெல்லி: உலகின் மிக சிறந்த நிறுவனமாக கருதப்படுவது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மேக் கம்பியூட்டர், மேக் ஃப்ரோ, ஐபேட், ஐபாட், மற்றும் ஐபோன். இதில் ஐபோனின் அறிமுகம் உலக மொபைல் தொழிற்நுட்பத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

இத்தகைய ஐபோன்களின் விற்பனை உலக நாடுகள்அனைத்திலும் சிறப்பாக உள்ள முக்கியமாக அமெரிக்கா, சீனா, போன்ற வளர்ந்த நாடுகளில் அதன் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கிறது, ஆனால் இந்தியா, பாங்களதேஷ் போன்ற நாடுகளில் அதன் விற்பனை சற்று மந்தமாக உள்ளது. இந்த மந்தமான விற்பனைக்கு முக்கிய காரணம் இதன் அதிகபடியான விலை.
எனினும், இந்தியாவில் ஐபோன்கள் மீதான மோகம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது குறிப்பிடதக்கது.
இதனால் இந்திய மொபைல் சந்தையில் இதன் விற்பனை 1.7 சதவீதமாக பதிவாகியுள்ளது, இது கடந்த வருட விற்பனையை விட 55 சதவீதம் அதிகமாகும். மேலும் வரும் காலங்களில் இதன் விற்பனை மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications