ஜப்பான் வங்கியிடம் ரூ. 3,500 கோடி கடன் வாங்கிய முகேஷ் அம்பானி!
டெல்லி: இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது, இந்நிறுவனம் திருபாய் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக ஜப்பான் வங்கியிடம் சுமார் 55 கோடி டாலர் அதாவது சுமார் ரூ. 3,500 கோடி நிதியை கடனாக பெற்றுள்ளது.

இந்த நிதியை பெட்ரோ கெமிக்கல் ஆலையை விரிவுபடுத்தவும், புதிய எரிவாயு பிரிவைத் தொடங்கவும் பயன்படுத்திக்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று வருகிறது
இதற்காக ஏற்றுமதிக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்துடன் (இசிஏ) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஜப்பானிய வங்கிகளின் கூட்டமைப்பான ஜேபிஐசி-யிடமிருந்து நிதி கடனாக பெறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications