இந்திய வங்கிகளின் புதிய தலைவலி வராக் கடன்!!

டெல்லி: தற்போதிய பொருளாதார நிலையில் இந்திய வங்கித்துறைக்கு பெரும் தலைவலியாக இருப்பது வராக் கடன் தான். வங்கிகளில் வாங்கிய கடனை சில விஷமிகள் வேண்டும்மென்றே திருப்பி செலுத்தாமலும், போலியான தகவல்களை கொடுத்து கடன் பெற்றவர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து பொதுத் துறைவங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய பொது துறை வங்கிகளில் வாராக்கடன் மற்றும் செயற்பட சொத்துக்கள் மிக பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது. இதனால் வங்கிகளின் வலிமை மற்றும் பாதுகாப்புத் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த இக்கட்டான நிலையை களைய நிதியமைச்சகம், கடன்களை திருப்பி செலுத்த தவறிய நபர்களின் மீது அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க அனுமதியளித்துள்ளது.

உண்மையான பிரச்சனை

உண்மையான பிரச்சனை

வங்கிளுக்கு கடனை திருப்பி செலுத்த தவறிய நபர்களில் 75 சதவீதம் பேர் போலியான ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர். இதனால் இவர்களை கண்டுபிடிப்பது மிக பெரிய சவலாக உள்ளதாக பொது துறை வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

போலியான ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யும் அளவிற்கு நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அனுமதியளித்துள்ளது. (அப்போ பல பெரும் தலைகளுக்கு கேஸ கன்ஃபாம்..)

வராக் கடன்

வராக் கடன்

ரிசர்வ் வங்கியின் தகவல் படி 2013ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில் பொதுதுறை வங்கிகளில் வராக் கடன் மதிப்பு 1.83 லட்சம் கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு 2.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்

பொது துறை வங்கிகளை ஒப்பிடுகையில் தனியார் வங்கிகள் வராக் கடனை பெருமளவில் கட்டுப்படுத்தபட்டுள்ளது. (தனியார் வங்கிகள் வசூல் செய்யும் ஸ்டைல் தனி..). இந்த நிலை மிகவும் கவலையளிப்பதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+