நிதி அமைச்சகத்துடன் சிதம்பரத்தின் கடைசி கூட்டம் இன்று!!

டெல்லி: இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் புதிய ஆட்சி அமையும் பட்சத்தில், நடப்பு ஆட்சி காலத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிதியமைச்சகத்துடன் நடத்தும் கடைசி கூட்டம் இன்று காலை 10 மணியளவில் துவங்கியது.

இக்கூட்டத்தில் இந்த 10 வருட ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட சில முக்கிய செயல்திட்டங்கள் மற்றும் ஒப்புதல் நிலுவைகளை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கவே இந்த கூட்டம் கூட்டியிருப்பதாக நிதியமைச்சகத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபாஸ்ட் டிராக்

ஃபாஸ்ட் டிராக்

கிடப்பில் இருக்கு பைல்களை விரைவில் தீர்க்கும் முயற்சியில் இக்கூட்டம் ஃபாஸ்ட் டிராக் முறையில செயல்பட்ட உள்ளதாக சிதம்பரம் தெரிவித்தார்.

நிதியமைச்சகத்தில் தூண்கள்

நிதியமைச்சகத்தில் தூண்கள்

இந்ந கூட்டம் நிதியமைச்சகத்தின் தூண்கள் என போற்றப்படும் பொருளாதார விவகார செயலாளர் அரவிந் மாயாராம், வருவாய் துறை செயலாளர் ராஜிவ் தாக்குர், செலவின செயலாளர் ரத்தன் வட்டல், முதலீட்டு குறைப்பு செயலாளர் ரவி மத்தூர் மற்றும் நிதியியல் செயலாளர் ஜி.எஸ் சந்து ஆகியோருடன் நடைபெறுகிறது. இவர்களுடன் நிதியமைச்சர் சிதம்பரம் கலந்து கொள்கிறார்.

தேர்தல்

தேர்தல்

இந்தியாவில் 9 கட்டமாக நாடாளுமன்ற தேர்த்ல் நடைபெற்று வருகிறது, இதன் முடிவுகள் மே 16 வெளிவர உள்ளது. மேலும் இந்த ஆட்சிமாற்றம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் மிகுந்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளது.

அப்பா - மகன்

அப்பா - மகன்

இந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் நிற்கிறார். இதற்காக தேர்தல் பிரச்சாரத்திற்காக சிதம்பரம் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கு பறந்து வருகிறார். (சிதம்பரத்தின் பிரச்சாரத்தில் பயங்கர கூட்டமாம்!!..)

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+