டெல்லி: இந்திய முதலீட்டு சந்தையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. 2014ஆம் நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் அன்னிய முதலீடு 12.29 சதவீதம் அதிகரித்து 2.01பில்லியன் டாலராக உள்ளது. தேர்தலின் காரணமாக இந்திய சந்தையில் அதிகளவு முதலீடு செய்யப்படுவதாக நிதியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் (DIPP) தகவல் படி 2013ஆம் நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் 1.79 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சரிவு
2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டின் அன்னிய முதலீடு 0.6 சதவீதம் குறைவுதான்.
முதலீடுகளும்.. துறைகளும்..
2013-14ஆம் நிதியாண்டின் 11 மாதங்களில் செய்யப்பட்ட முதலீடுகளை இங்கே பார்போம். சேவைத் துறை (2.18 பில்லியன் டாலர்), ஆட்டோமொபைல்ஸ் (1.28 பில்லியன் டாலர்), ஃபார்மா (1.27 பில்லியன் டாலர்) மற்றும் கட்டுமானம் (1.05 பில்லியன் டாலர்) அளவுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவும் பிற நாடுகளும்
மொரிஷியஸ் நாடு இந்தியாவில் 4.48 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது, சிங்கபூர் 3.91 பில்லியன் டாலர், பிரட்டன் 3.21 பில்லியன் டாலர் மற்றும் நெதர்லாந்து 2.20 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
இந்திய தற்போது 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைவான 4.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையை களைய இந்திய பொருளாதாரத்திற்கு அதிகப்படியான அன்னிய முதலீடு தேவை.
1 இலட்சம் கோடி
இந்தியாவின் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் (2012-13 மற்றும் 2016-17) நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் தேவை. ஒரு டிரில்லியன் டாலர் என்றால் 100,000 கோடி டாலர் ஆகும்.
ரூபாய் மதிப்பு
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பெருமளவில் அன்னிய முதலீடு குறைந்தது சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications