பெங்களுரூ: கடந்த 5 வருடங்களில் இந்தியாவில் ஆன்லைன் சில்லரை வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதில் சில நிறுவனங்கள் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கும் நிலையில் உள்ள, இருப்பினும் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் சில நிறுவனங்கள் முடங்கியும் உள்ளது.
இந்த போட்டி நிறைந்த இச்சந்தையில் வாடிக்கையாளர் பயனளிக்கும் வகையில் சில முக்கிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்.
புதிய சேவை
வாடிக்கையாளர் இந்நிறுவன இணையதளத்தில் எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் ஒரே நாளில் டெலிவரி செய்ய இந்நிறுவனம் முற்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை அடைய இத்திட்டம் உதவும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டி.. இலக்கு..
இச்சந்தையில் போட்டி மிகவும் அதிகமாக உள்ள நிலையில் இந்த சேவையின் சந்தையில் முதல் இடத்தை தக்கவைத்து கொள்ள இந்நிறுவனம் முடிவு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் விற்பனை 1 பில்லியன் டாலரை அடைய இத்திட்டம் மிகவும் சிறப்பாக அமையும் என இச்சந்தைய வல்லுனர்கள் தெரிவித்தனர்.
ஒரு நாளில் டெலிவரி
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வது சுலபமான விஷயம் இல்லை, மிகவும் கடினமான விஷயம். இத்தகைய திட்டத்தை கையில் எடுத்துள்ள ஃபிலிப்கார்ட் நிறுவனம் இத்துறையில் ஜாம்பவான் என கருதப்படும் அமேசான் நிறுவனத்திற்கு இக்கட்டான சூழ்நிலையை அளித்துள்ளது.
4 நிறுவனங்கள்
இச்சந்தையில் பல நிறுவனங்கள் இருப்பினும் ஃபிலிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் மற்றும் இபே போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் உண்மையான போட்டி ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கும் இடையே தான்.
10 மாவட்டங்கள், அதிகமான கட்டணம்
இந்த சேவையை பெங்களுரூ, டெல்லி, மும்பை, கொல்கத்தா, நொய்டா, குர்கான், மானேசர், நவி மும்பை, தானே மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒரு டெலிவரி திட்டத்திற்கு 200 ரூ கட்டணத்தை வதித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications