டெல்லி: சில்லரை வர்த்தகத்தில் உலகளவில் கொடிகட்டி பறக்கும் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கடைகளை திறக்க இந்திய நிறுவனமான பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தனது செயல்பாடுகளை தொடர்ந்தது. 2013ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் பார்தி நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் நிறுவனம் கைபற்றி இந்தியாவில் தன்னிச்சையாக செயல்பட துவங்கியது.
இந்த பங்கு கைபற்றுதலின் காரணமாக இந்நிறுவன லாபத்தில் 151 மில்லியன் டாலர் அதவாது 915.6 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வால்மார்ட் முதலீடு
வால்மார்ட் நிறுவனம் இதுவரை இந்தியாவில் சமார் 2,025 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும் பார்தி நிறுவன பங்குகளை கைபற்றுவதற்காக வால்மார்ட் நிறுவனம் 606 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
இந்தியாவில் வால்மார்ட்
2009ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பகுதியில் தனது முதல் கிளையை திறந்தது. தற்போது இந்தியாவின் வர்த்தகத்தில் சிறந்து விளங்கு 8 மாநிலங்களில் 20 கிளைகளை திறந்துள்ளது.
6 வருட கூட்டணி
வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் செயல்பட பார்தி நிறுவனத்தின் உதவி தேவைபட்டது இப்போது இந்தியாவில் முக்கியமான பகுதிகளில் தனது வர்த்தகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இந்திய நிறுவனத்தின் கூட்டணியை கழற்றிவிட்டது. இந்நியாவில் வால்மார்ட் மற்றும் பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் கூட்டணி 6 வருடமாக செயல்படுகிறது.
இந்திய நிறுவனங்களின் நிலை
பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை துவக்க இந்திய நிறுவனங்களின் உதவியை நாடுவதுண்டு. பின்பு சில காலத்திற்கு பிறகு (வர்த்தகம் சூடு பிடித்த பிறகு..) இந்திய நிறுவனங்களின் கூட்டணியை கழற்றி விடுவது வழக்கம். இந்த வகையில் அதிக தொகையுடன் கூட்டணி பிரிந்த நிறுவனங்களில் இதுதான் டாப்.
வால்மார்ட சிஇஓ
வால்மார்ட் இந்திய பிரிவின் சிஇஓ கிரிஷ் ஐயர் ஆவார். அடுத்த 5 வருடங்களில் இந்தியாவில் 50 கிளைகளை திறப்பதே முக்கிய குறிக்கோள் என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications