நோக்கியா நிறுவனத்தின் புதிய சீஇஒ ராஜீவ் சூரி!! இந்தியர்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெல்சின்கி: துவண்டு போன நோக்கிய நிறுவனத்தை சிறப்பாக செயல்படுத்த ஒரு புதிய சிஇஒ-வை இந்நிறுவனம் நியமித்துள்ளது இதற்கான அறிவிப்பை செவ்வாய் கிழமையன்று அறிவித்தது. நாம் அனைவரும் நினைத்தப்படி ராஜீவ் சூரி அவர்களே நோக்கிய நிறுவனத்தின் சீஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு இந்தியர் என்பது நாம் அனைவருக்கும் பெருமை. "கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு" இது பழைய ஸ்டைல் "இந்தியன் சென்ற இடமெல்லாம் வெற்றி" இது புது ஸ்டைல்.

 

நோக்கிய நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, இந்நிறுவனத்தின் தற்போதிய நிலை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இத்தருணம் ராஜீவ் சூரி அவர்களுக்கு மிகவும் சவாலானதாகவே இருக்கும் என இந்நிறுவனத்தின் மற்ற உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜீவ் சூரி

ராஜீவ் சூரி

ராஜீவ் சூரி அவர்கள் நோக்கியா நிறுவனத்தின் வன்பொருள் தயாரிப்பு பிரிவான நோக்கிய சொல்யூஷன் மற்றும் நெட்வொர்க்ஸ் (NSN) நிறுவனத்தின் தலைவர் ஆவர். நோக்கியா நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் இருந்த போது கூட இப்பிரிவு இவரின் கட்டுப்பாட்டின் கீழ் மிகவும் சிறப்பாக செயல்பட்டது.

சிறப்பான செயல்பாட்டின் விளைவு

சிறப்பான செயல்பாட்டின் விளைவு

நோக்கியா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இப்பிரிவு 12.7 பில்லியன் யூரோ வரை வர்த்தகம் செய்தது குறிப்பிடதக்கது.

இவர் தான் சரியான ஆள்

இவர் தான் சரியான ஆள்

நோக்கியா நிறுவனத்தின் சேர்மன் கூறுகையில் "இந்நிறுவனத்தை புதிய பரிமானத்திற்கு கொண்டு செல்ல இவருக்கு முழுமையான தகுதி உண்டு, மேலும் இவரின் தலைமையில் நிறுவனம் செயல்பட நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்"

கல்வி
 

கல்வி

ராஜீவ் சூரி மங்களுர் பல்கலைக்கழகத்தில் எலக்டிரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பெறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பெரு நிறுவனங்களிள் இருக்கும் சில உயர் அதிகாரிகளை போலவே அவரும் எம்பிஏ பட்டம் பெறவில்லை. இவர் கற்றது எல்லாம் அனுபவ பாடம் தான்.

இவரின் தனிப்பட்ட ஆர்வம்...

இவரின் தனிப்பட்ட ஆர்வம்...

அனைவருக்கும் பல வகைப்பட்ட ஆர்வம் இருக்கும் சிலருக்கு புத்தகம் படித்தல், சிலருக்கு நாணயங்கள் சேகரித்தல் போன்றவை. ஆனால் இவருக்கு தனது உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் அவர் தனது ஒய்வு நேரத்தை முழுவதும் ஜீம்மில் தான் களிப்பார். இதமட்டும் இல்லாமல் புத்தகம் படித்தல், இசை மற்றும் டென்னிஸ் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் இவர்.

சம்பளம்

சம்பளம்

மேலும் இவரின் சம்பளம் குறித்து எந்த விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nokia names Rajeev Suri as new CEO

Rajeev Suri will become the new chief executive of Finnish telecommunications gear maker Nokia, the company said on Tuesday, adding that it would return an extra 1 billion euros to shareholders from the sale of its phone unit.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X