ரூ.3,200 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை ஒப்பந்தத்தை தட்டிச் சென்ற ஐஆர்பி!!

டெல்லி: மும்பை பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள ஐஆர்பி கட்டுமான நிறுவனம் 3,200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நெடுஞ்சாலை ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஏதேஷி முதல் அவுரங்காபாத் வரையிலான சுமார் 100 கிலோமீட்டர் முதல் 290.20 கிலோமீட்டர் தொலைவு வரை நான்கு வழி சாலையை இந்நிறுவனம் அமைக்க உள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3,200 கோடி மதிப்புடையது, இந்த பணியை 910 நாட்களுக்குள் முடிக்க உள்ளது ஐஆர்பி கட்டுமான நிறுவனம்.

முந்தைய ஒப்பந்தம்

முந்தைய ஒப்பந்தம்

இதற்கு முன் இந்நிறுவனம் சோலாப்பூர் முதல் ஏதேஷி வரையிலான 100கிமீ தொலைவு கொண்ட 4 வழி சாலையை அமைத்து வருகிறது. இந்த புதிய ஒப்பந்தத்தை தொடரந்து இந்நிறுவனம் சுமார் 290 கிமீ வரை சாலை பணிகளை தொடர உள்ளது.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

இந்நிறுவனத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை வாரியத்திடம் 558 கோடி ரூபாயை கடன் தொகை கேட்டு கொண்டுள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்த ஒப்பந்தத்தின் எதிரொலியாக இந்நிறுவனத்தின் பங்கு விலை நேற்று 122.50 ரூபாய் வரை உயர்ந்தது, இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே இந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 120 ரூபாய் வரை சிரிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+