நியூயார்க்: சமுக வலைதளமான டிவிட்டர் நிறுவனம் 2014ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 132 மில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் லாபம் குறைந்தாலும் இந்நிறுவனத்தின் சிறப்பான சேவை மற்றும் மென்பொருள் அமைப்பால் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள நிலையில் சமுக வலைதளம் என்பது மிகப்பெரிய ஆயுதமாக வளர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இன்றைய இளைஞர்கள் இத்தகைய தளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதே. இதனை பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் பெரும் பணத்தை சம்பாதித்து வருகிறது.
வருவாய் 119% உயர்வு
2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 119 சதவீதம் உயர்ந்து 250 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் சராசரியாக ஒரு மாதத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 255 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
பேஸ்புக் - டிவிட்டர்
இந்த சமுகவலைதள உலகில் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம். பேஸ்புக் நிறுவனம் 2004ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதேபோல் டிவிட்டர் 2006ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களில் டிவிட்டர் வலைதளம் தான் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளதாக மக்களிடையே கருத்து நிலவுகிறது. இதனால் தான் ஏனோ இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. உண்மையில் பேஸ்புக் தளம் முற்றிலும் பாதுகாப்பற்றவை.
சீஇஓக்கள்
டிவிட்டர் நிறுவனத்தின் சீஇஓ ஜாக் டேர்சி (37) மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் சீஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் (29) ஆவர். இவரும் செய்ய செயல் சாதாரணமானது இல்லை, ஒரு புதிய சமுக பிணைப்பையும் மற்றும் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளனர். அடுத்த 5 வருடங்களில் இந்த துறையின் வளர்ச்சி யாராலும் கணிக்க முடியாததாக உள்ளது.
வருவாய்
2014ஆம் நிதியாண்டின் படி பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 7.87 பில்லியன் டாலர், டிவிட்டர் நிறுவனத்தின் வருவாய் வெறும் 664 மில்லியன் டாலர் தான். இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் வாடிக்கையாளரை அதிகரிக்க தொடர்ந்து பல முயற்சிகள் செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications