டோக்கியோ: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் முன்றாவது பொருளாதார நாடான ஜப்பான் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்நிலையில் மார்ச் மாத கணிப்பின் படி இந்நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் கடந்த மாதம் 3.6 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம், இந்த மாதமும் மாற்றம் எதும் இல்லாமல் இருக்கிறது.
இந்தியாவில் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் 9.0 சதவீதத்திற்கு அதிகமாக இருந்ததது. இதை தொடர்ந்து 2012ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைந்தது. 2013ஆம் ஆண்டில் இந்தியாவின வேலையில்லா திண்டாட்டம் 13.3 சதவீதமாக உள்ளது.
ஜப்பான் நாட்டின் வளர்ச்சி
கடந்த 5 வருடங்களில் ஜப்பான் நாட்டின் தொழிற்துறையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பெற்றதுள்ளது. இதனால் இந்நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 46 மாதங்களாக தொடந்து குறைந்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
46 மாதங்கள்
கடந்த 46 மாதங்களில் ஜப்பான் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் 2.46 மில்லியனாக இருந்து 340,000 ஆக குறைந்துள்ளது.
துறை சார்ந்த வேலைவாய்ப்பு
உற்பத்தி துறையில் 190,000 பணியாளர்களை 10.61 மில்லியனாக உயர்ந்தது, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் 210,000ஆக இருந்த பணியாளர்கள் தற்போது 7.48 மில்லியனாக உயர்ந்துள்ளனர். மேலும் போக்குவரத்து மற்றும் விநியோகத்துறையில் சுமார் 300 சதவீத வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
மற்ற நாடுகள்
அமெரிக்கா - 6.7 சதவீதம், கனடா - 6.9 சதவீதம், ஆஸ்ரேலியா - 5.8 சதவீதம், ஜெர்மனி 5.1 சதவீதம், பிரட்டன் - 6.9 சதவீதம் இவை அனைத்தும் 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் கணிக்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications