சென்னை: இந்தியாவில் பரபரப்பாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை கோரும். அந்த வகையில் இந்த முறையும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை கோரிய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகளவில் தொழில் அதிபர்கள் உள்ளதாகவும், அவர்களின் சொத்து மதிப்பு இதுவரை எந்த வேட்பாளர்களிடமும் இருந்ததில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்று பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நந்தன் நிலக்கேனி தான் முதல் இடத்தை பிடித்துள்ளார் இவரின் சொத்து மதிப்பு 7,710 கோடியாகும்.
சரி இப்போது கட்சி வாரியார டாப் 3 பணக்கார வேட்பாளர்களை பார்போம்.
வி பாலகிருஷ்ணன்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்தவர். இவரின் சொத்து மதிப்பு 190 கோடி ரூபாய்.
மீரா சன்யால்
இவர் ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் சேர்மன் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 50 கோடிக்கும் அதிமாம்.
பிரபதாத் ராஜன் தாஸ்
இவர் ஒரு மருத்துவர், இவர் தன் படிப்பை அமெரிக்காவில் முடித்தார். இவரின் சொத்து மதிப்பு 37 கோடி.
கங்கா ராஜூ
ஆஸ்ரம் மருத்துவ கல்லூரியின் தலைவர் மற்றும் நிறுவனரான கங்கா ராஜூவின் சொத்து மதிப்பு 299 கோடி ரூபாய் ஆகும்
கன்வர் சிங் தன்வர்
ரியல் எஸ்டேட் அதிபரான இவரின் சொத்து மதிப்பு 179 கோடி ரூபாயாகும்.
ஹேமமாலினி
திரைப்பட நடிகையான ஹேமமாலினி அவர்களின் 178 கோடி ரூபாயாகும்.
நந்தன் நிலக்கோனி
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 7,710 கோடி ரூபாய்.
நவின் ஜிந்தால்
ஜிந்தால் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தின் சேர்மன் நவின் ஜிந்தால் இவரின் சொத்து மதிப்பு 300 கோடி ரூபாயிக்கும் அதிகம்.
வசந்த குமார்
சென்னையை சேர்ந்த வசந்த அண்ட் கோ நிறுவனத்தின் நிறுவனர் தான் வசந்த குமார், இவரின் சொத்து மதிப்பு 286 கோடியாகும்.


Click it and Unblock the Notifications