டெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தில் தான் பெரிய தலைகள் வெளியேறுகிறது என்று பார்த்தால் இந்தியாவின் பல நிறுவனங்களில் சீஇஓ-க்கள் வெளியேறுகின்றனர். நிறுவனங்களில் நிறுவனர்களை விட ஏன் பங்குதார்களை விட சீஇஒ-க்களுக்கு தான் நிறுவனத்தில் அதிகமான பவர் உண்டு. இந்த வகையில் இவர்கள் தீடிரென ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறினால் நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் முடங்கிவிடும்.
வெள்ளிக்கிழமை இந்தியாவின் 3 முக்கிய நிறுவனங்களின் சீஇஓக்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக பங்கு சந்தையில் இந்நிறுவனகள் அவசர அறிக்கையை சமர்ப்பித்தது.
காய்ர்ன் இந்தியா
இந்நிறுவனம் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் சீஇஓவான் திரு.பி. இளங்கோ தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தார். இப்பதவியில் இந்நிறுவனத்தின் சீஎஃப்ஓ சுதீர் மாதுர் இடைக்கால சீஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹெய்டெல்பெர்க் சிமென்ட் இந்தியா
சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுப்பட்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவில் இந்நிறுவனம் கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சீஇஓ மற்றும் தலைமை நிர்வாகி ஆஷிஷ் குஹா இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.
மேலும் இந்நிறுவனம் புதிய சீஇஓவை நியமிக்கும் வரை பதவியில் தொடர்ந்து இருக்குமாறு நிர்வாக் இவரைக் கேட்டுக்கொண்டது.
ஜெட் ஏர்வேஸ்
இந்தியாவின் விமான போக்குவரத்தில் 15 சதவீதம் கொண்டது ஜெட் ஏர்வேஸ். இந்நிறுவனத்தின் சீஇஓ மற்றும் சீஎஃப்ஓவாக இருக்கும் ரவிசங்கர் கோபாலகிருஷ்னன் வெள்ளிக்கிழமை அன்று முதல் இந்நிறுவனத்தில் இருந்கு வெளியேறினார்.
மல்டி காமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்
மல்டி காமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியாவின் சீஇஒ மனோஜ் வைஷ் தனது உடல்நிலை காரணமாக நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
பிற நிறுவனங்கள்
கடந்த சில மாதங்களில் இந்திய நிறுவனங்களில் பல உயர் அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர். இதில் ஏர்டெல் நிறுவனத்தின் செவுத் ஏசியா மற்றும் இந்தியா பிரிவுகளின் தலைமை அதிகாரி சஞ்சய் கபூர், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சஞ்சய் அகர்வால், பிரட்டானியா நிறுவனத்தின் வினிதா பாலி. மற்றும் இன்பேசிஸ் பற்றி சொல்லவே தேவை இல்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications