சென்னை: இந்திய வங்கித்துறைக்கு தற்போது பெரும் தலைவலியாக இருப்பது வராக் கடன் தான். இந்நிலையில் சென்னையில் நேற்று வங்கித் துறை சார்ப்பாக நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில் வங்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கலந்து கொண்டு வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகையை செலுத்தாத 406 நிறுவனங்களின் பட்டியலை அவர் வெளியிட்டார்.
கடன் தொகை
இந்த 406 நிறுவனங்கள் இந்திய வங்கிகளுக்கு சுமாப் 70,300 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் நாட்டின் பெரு நிறுவனங்கள் என கருதப்படும் நிறுவனங்களே அதிகப்படியான கடன் நிலுவையை வைத்துள்ளது.
முழுமையான தகவல்
இந்த 406 நிறுவனங்கள் பற்றிய முழுமையான தகவல்களை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என திரு. வெங்கடாச்சலம் தெரிவித்தார். மேலும் இக்கடன் தொகை பெற மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சில முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டாப் 50 நிறுவனங்கள்
இதில் டாப் 50 நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் 40,000 கோடியாகும். இந்த 50 நிறுவனங்களும் கோடிக்கனக்கில் லாபங்களை பெற்றுவருவது குறிப்பிடதக்கது.
வழக்குகள்
கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்டப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது.
சாமானிய மக்கள்
சாதாரண மக்கள் கல்விக்காகவும், விவசாயத்திற்காவும், மருத்துவ செலவிற்காகவும் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் புகைப்படத்தை போஸ்டரில் போடுவதும், கெடுபிடி செய்யும் அரசாங்கம், மிகப்பெரிய செல்வந்தர்கள், மிகப் பெரிய நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications